should not drive with drink in the road
குடித்துவிட்டு வண்டி ஓட்டினால், ரூபாய் 1௦ ஆயிரம் ஸ்பாட்லையே கட்ட வேண்டும் என கடுமையான சட்டம் பிறபிக்கப்பட்டுள்ளது
அதன்படி, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மசோதா தொடர்பாக பாராளுமன்றத்தில் பல சட்ட திருத்தங்களுடன் கொண்டு வரப்பட்டன
அதன் படி, சரக்கடித்துவிட்டு வண்டி ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று, ஹெல்மட் அணியாமல் வண்டி ஓட்டுபவர்களுக்கு 1௦௦ ரூபாயிலிருந்து,1௦௦௦ ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும், ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் சென்றால் 10 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்பீடு
வாகன விபத்து ஏற்பட்டால் 10 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தால் 5 லட்ச ரூபாயை காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற சட்ட திருத்தங்களால், விபத்து ஏற்படுவது தடுக்கப்படும் மேலும் அபராத தொகை அதிகம் என்பதால், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது தடுக்கப் படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது
