மீண்டும் கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது தெரியுமா..?   

தென் தமிழக கடலோர பகுதியில் உருவாகி இருக்கிற காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில நேரங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக  ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதற்கிடையில் குமரி கடல் பகுதியில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது