set off box is totally free explained by tn govt
செட் பாக்ஸ் இலவசம் தான்...! யாரும் காசு கொடுத்து வாங்க வேண்டாம்
அரசு கேபிள் இலவசமா இல்லையா என பலரும் குழம்பி வருகின்றனர். எனவே செட் பாக்ஸ் குறித்த விவரம் முழுவதும் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை விலை கொடுத்து வாங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், சில உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ் தாங்கள் வழங்குவதாகவும், அதற்காக ரூ. 500 செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் இணைப்புத் துண்டிக்கப்படும் என்றும் பொதுமக்களிடம் கூறுவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.
எனவே, பொதுமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவியின் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய இலவச டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் உரிமம் பெற்றுக்கொண்டு அரசு கேபிள் டிவி இணைப்பைத் துண்டித்தும், தனியார் நிறுவனத்துக்கு சாதகமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தியும், கட்டாயப்படுத்தியும் தனியார் செட்டாப் பாக்ஸ் வாங்க வற்புறுத்துவதாகவும் புகார்கள் வருகின்றன.
அவ்வாறு யாரேனும் செயல்பட்டால் அவர்களின் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதொடர்பான புகாரை 1800 425 2911 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செட் ஆப் பாக்ஸ் குறித்த முழு விவரத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த லிங்கை பயன்படுத்தி தெரிந்துக்கொள்ளலாம்
http://tactv.in/press_release/Hon_bleCM-TNCableTVsetupbox-Date01.09.2017.pdf
