தயவு செய்து "தை பூசத்துக்கு" லீவு விடுங்க...! வியாழக்கிழமையதுவுமா எடப்பாடியை பார்த்து கோரிக்கை வைத்த சீமான்..! 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை இல்லத்தில் சந்தித்து பேசினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். 

அப்போது, "மலேசியாவில் தை பூசத்திற்கு விடுமுறை அளிக்கின்றனர். தமிழகத்திலும் தைப்பூசத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சீமான், நடிகர் விஜய் வீட்டில் ரெய்டு நடத்துவது குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். அப்போது, நடிகர் விஜயை விட பல மடங்கு அதிகம் சம்பளம் பெறும் நடிகர் யார் என அனைவருக்கும் தெரியும். ஆனால் தம்பி விஜய் வீட்டில் வருமான வரி சோதனை செய்து ஒரு விதமான பயத்தை ஏற்படுத்துவதற்காக இப்படியெல்லாம் செய்கின்றனர். "ஜிஎஸ்டி வரியோடு சேர்த்து126 கோடி சம்பளம் வாங்குகிறார் அவர் 66 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என்பதையும் வேண்டாம்" என்று சொல்லிவிட்டனர். என நடிகர் ரஜினிகாந்தை  மறைமுகமாக  தாக்கினார். 

தஞ்சையில் தமிழில் குடமுழுக்கு நடப்பதை திசை திருப்பவே நேற்று ரஜினி கருத்து தெரிவித்து இருந்தார். அவர் எது பேசினாலும் பிரேக்கிங் நியூசா முதல் பக்கத்தில் போடுறீங்க.... இதெல்லாம் நீங்க கேட்க மாட்டீங்க ...என மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.

அதன் பின்னர், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து பேசிய அவர், "பழங்குடி மக்கள் பதினோரு லட்சம் பேர் இருக்காங்க... நாடெங்கும் அதிக அளவில் பிச்சைக்காரர்களும் இருக்கிறார்கள்.. குறிப்பாக டெல்லியில் 13,000 பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சன்னியாசி செல்பவர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று ஆவணம் கேட்டால், அவர்கள் என்ன ஆவணம் கொடுப்பார்கள்? சன்னியாசியிடம் கோவணத்தை தாண்டி என்ன இருக்கிறது? இப்படி பல கேள்விகளை அடுக்கடுக்காகாக எழுப்பினார்.

இது ஒரு பக்கம் இருக்க, ஆரம்பத்தில் பெரியாரிஸ்ட் கொள்கை பேசி வந்த சீமான், பிறகு முருகன் என் முப்பாட்டன் என்றார். இந்த ஒரு தருணத்தில் தை பூசத்திற்கு லீவு கேட்டு முதலவரையும் சந்தித்து கோரிக்கை வைத்து விட்டார். 
 
குட முழக்கு நடந்த நேற்று( புதன் ), ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்க, அடுத்த நாளான இன்றே.. வியாழக்கிழமை முதல்வரை சந்தித்து தை பூசத்துக்கு லீவு வேண்டும் என கேட்டு உள்ளார் சீமான்