கொரோனா எதிரொலி! செல்போன் கேமுக்கு பதிலாக "பாரம்பரிய விளையாட்டுக்கு" மாறும் "பள்ளி குழந்தைகள்"!  

வளர்ந்து வரும் இந்த விஞ்ஞான உலகத்தில் இன்று உள்ள குழந்தைகளும் அவர்களின் நேரத்தை போக்குவதற்கு மொபைல் போனை தான் பயன்படுத்துகின்றனர். என்னதான் பெற்றோர்கள் மொபைல் போனை குழந்தைகளிடம் கொடுக்க மறுத்தாலும், வேறுவழியின்றி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. 

அதற்கெல்லாம் காரணம்... தனிக்குடித்தனம், குழந்தையோடு விளையாட மற்ற குழந்தைகள் அருகில் இல்லாதது, ஒரே ஒரு பிள்ளையை பெற்று இருப்பவர்கள், மேலும் தவிர்க்க முடியாத சூழலில் பெற்றோர்களும் செல்போனை தான் அதிகம் பயன்படுத்த வேண்டியது உள்ளது. காரணம்....

நாம் செய்யும் வேலையும் அப்படித்தான். இன்று செல்போன் இல்லை என்றால் எந்த ஒரு வேலையும் ஆகாது என்பது போல் ஆகிவிட்டது.இருக்கும் இடத்தில் அமர்ந்துகொண்டே வேலை செய்ய ஒரு செல்போன்,நெட்வொர்க் இருந்தாலே போதுமானது என்ற நிலை உருவாகி உள்ளது. ஆனால் இதனை எல்லாம் பார்த்து வளரும் குழந்தைகளும் அதே மன நிலைக்கு சென்று விடுகின்றனர்.

எனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம்... செல்போன் விளையாடலாமா என்ற எண்ணம் தோன்றினால் பரவாயில்லை.."நேரம் கிடைக்கும் போது படிக்கலாம்... மற்ற நேரத்தில் செல்போனில் விளையாடலாம்" என்ற நிலைதான் தற்போது நீடிக்கிறது. அதிலும் கொரோனாவால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு இருக்கும் இந்த ஒரு தருணத்தில், வீட்டில் குழந்தைகள் வேறு எங்கும் செல்லாமல் இருப்பதற்காக பெற்றோர்களும் வேறுவழியின்றி அவர்களுக்கு செல்போன் கொடுத்து விளையாட வைக்கின்றனர். எவ்வளவுதான் மறுத்தாலும் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை என்றே மனவருத்தம் அடைகின்றனர்.

இந்த ஒரு நிலையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான தட்டாங்கல், தாயம், பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை வீடுகளில் இருந்தபடியே விளையாடு கற்றுக் கொடுக்கின்றனர். அதிலும் புளியங்கொட்டை கொண்டு பல்லாங்குழி விளையாடுவ, ராஜா ராணி விளையாடுவதும் சொல்லிக் கொடுக்கின்றனர்.கொரோனா என்ற ஒன்றால் இன்று மக்களின் வாழ்க்கை முறையே மாற தொடங்கி உள்ளது.