Sani Peyarchi 2022: உங்களுக்கு சனி தோஷம் இருந்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபட இந்த காலா கட்டம் சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

நீதியின் கடவுளான சனி பகவான் ஏப்ரல் 29 வெள்ளிக்கிழமை, அதாவது இன்று தனது ராசியை மாற்றி கும்ப ராசிக்குள் நுழைய உள்ளார். எனவே, இந்த நாள் உங்களுக்கு சனி தோஷத்தில் இருந்து விடுபட உறுதுணையாக இருக்கும். இன்றிலிருந்து சனி பகவான் உங்களுக்கு வேண்டிய அருளை வரி வழங்க போகிறார். 

சனி தோஷம்:

ஜோதிடத்தின் படி, சனியும் சந்திரனும் சேர்ந்து நின்றாலும், அல்லது பரிவர்தனை பெற்றாலும் அது சனி தோஷம் ஆகும். சந்திரன் வெறும் 30 நாட்களில் தனது ராசி மண்டலத்தை சுற்றி வருவார். ஆனால், சனி பகவானோ 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகவும் மெதுவாக சுற்றி வருவார். 

சனி பகவான் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல், அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களைத் தருபவர். எனவே உங்களுக்கு சனி தோஷம் இருந்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபட இந்த காலா கட்டம் சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

சனி தோஷம் பாதிப்பு:

சனி தோஷம் உள்ளவர்களுக்கு திருமணத்தில் தடை, வேலையில் சுமுகமற்ற நிலை, பணிச்சுமை, சோம்பல், விளைச்சல் பாதிப்பு, உடல் உறுப்புகளில் கோளாறு ஏற்படலாம்.

எனவே, சனி தோஷம் நீங்க நாளை பிறக்கும் சனிக் கிழமை, உங்களுக்கு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. 

சனி தோஷம் நீங்க பரிகாரம்:

1. நீங்கள் இந்த நாளில் துவங்கி சனிக் கிழமைகள் தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நதியில் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபடுவது அவசியம். 

2. கறந்த பசும் பாலினைக் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்வதும், சனிக் கிழமைகளில் சிவனை வில்வம் கொண்டு அர்ச்சித்து, பூஜை செய்வது நன்மையாக இருக்கும். 

3. அதேபோல அன்னதானம் செய்வதும் நன்று. ஒரு முறை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபட்டு வந்தால் சனி தோஷம் தீர்க்கும். 

4. ஈஸ்வரரை வணங்கி சிவ புராணம், பஞ்சாட்சரம், சுதர்சன மூல மந்திரம், சுதர்சன அஷ்டகம் போன்றவற்றை பாராயணம் செய்வதும், சிறந்த பலன்களை கொடுக்கும். 

மேலும் படிக்க....Sani Peyarchi 2022: 30 வருடங்களுக்கு பிறகு கும்பத்தில் இன்று சனி பெயர்ச்சி...ராஜா யோகம் பெறப்போகும் 5 ராசிகள்!