சச்சின் ட்வீட்..! யார் அவர்..? சந்திக்க ஆசை.! "ஐடியா" கொடுத்த சென்னை ஓட்டல் ஊழியர் குறித்து சுவாரஸ்ய தகவல் ..!

கிரிக்கெட் என்றாலே சச்சின் டெண்டுல்கரை மட்டுமே நினைவில் வைத்திருந்த காலம் இன்றுவரை இருக்கிறது என்றால், நம்மால் அதனை மறுக்க முடியுமா? அதுதான் உண்மை. இந்த ஒரு நிலையில் சச்சின் டெண்டுல்கர் சென்னையில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய தருணத்தில் தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதிகளில் தங்கி உள்ளார்.

அப்போது சச்சின் ஒரு காஃபி வேண்டும் என்று விடுதி ஊழியரிடம் கேட்டு உள்ளார். காஃபி  கொண்டு வந்த ஊழியர் சச்சினிடம் சில விஷயத்தை சொல்ல ஆசைப்பட்டு அனுமதி கேட்டு உள்ளார். உடனே சச்சினும் சொல்லுங்க என சொல்ல...அப்போது அந்த ஊழியர், "நீங்கள் பயன்படுத்தும் "எல்போ காட்டு" சற்று மாற்றி வடிவமைத்து பயன்படுத்தினால், பேட்டிங் செய்ய  ஈஸியா இருக்கும். எனக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நிறைய பேசி இருக்கிறேன். சந்தித்து இருக்கிறேன். ஆனால் அந்த ஒரு நபர் மட்டும் தான் எனக்கு இது போன்று ஆலோசனை கூறினார். அவரை சந்திக்க விருப்பம் உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் இதனை நினைவு கூர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார். அதில்,"எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்கமுடியாத தருணங்களாக மாறுகின்றன.சென்னை டெஸ்ட் தொடரின்போது தாஜ் கொரமண்டல் ஊழியர் ஒருவர் என்னுடைய "எல்போ போர்ட்" பற்றி கூறி ஆலோசனைக்கு பின், அதன் வடிவத்தை மாற்றினேன். அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன். கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்" தெரிவித்துள்ளார். இவருடைய இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.