அதுமட்டும் இப்போ இல்ல! ரிசர்வ் பேங்க் கவர்னர் உறுதி!

வங்கி வட்டிவிகிதத்தில் இப்போதைக்கு மாற்றம் இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி ஸ்கந்த தாஸ் கைவிரித்துவிட்டார்.

இந்தியாவின் பொருளாதார நிலை மந்தமாகி உள்ளது. உள்நாட்டு உற்பத்தி 6.1 சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், புதிய புள்ளிவிபரப்படி உற்பத்தி 5 சதவீதமாக குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.இதனைத் தொடர்ந்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி 5.1% என்று மாற்றம் இல்லாமல் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 5ம் தேதி நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக்கண்காணிப்பு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்தி ஸ்கந்த தாஸ் பதவிக்கு வந்ததும் கடந்த ஜனவரியில் இருந்து வங்கி வட்டிவிகிதத்தை ஐந்துமுறை குறைத்தார்.ஆனால், அதன் பலனை வங்கியின் வாடிக்கையாளர்களோ, தொழில்துறையோ அனுபவிக்கவில்லை.
இதனால் ரெபோ வட்டிவிகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.இதுகுறித்து இன்று கருத்து தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி ஸ்கந்ததாஸ், வட்டிவிகித மாற்றங்கள் பங்குச்சந்தையில் பிரதிபலிப்பது ஏன் என்று விளங்கவில்லை.கடந்த பிப்ரவரியில் துவங்கி 1.35சதவீதம் வரை வட்டியில் மாற்றம் கொண்டுவந்துள்ளோம்.

அமெரிக்கா-  சீனா வர்த்தச்சிக்கல் ஓரிருவாரத்தில் முடிவுக்கு வந்துவிட்டால் பொருளாதாரம் முன்னேறும்.அதன்பின், தகுந்த நேரத்தில் வட்டிவிகிதத்தை மாற்றியமைக்க ரிசர்வ் வங்கி முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.