Asianet News TamilAsianet News Tamil

வயது மூத்த பெண்களின் மீது மையல் கொள்ளும் ஆண்கள்... அம்மாடியோ!! அந்த ஈர்ப்புக்கு இப்படி ஒரு காரணமா? 

Relationship Tips : வயதில் மூத்த பெண்கள் மீது ஆண்கள் காதல் கொள்ள சில காரணங்கள் உள்ளன. சில குணங்கள் இருக்கும் ஆண்கள் மட்டும் வயதில் மூத்த பெண்கள் மீது காதல் கொள்வார்கள். 

relationship tips reasons behind why some younger men love older women in tamil mks
Author
First Published Aug 13, 2024, 6:18 PM IST | Last Updated Aug 13, 2024, 6:29 PM IST

எல்லா ஆண்களுக்கும் ஒரே மாதிரியான ரசனை இருப்பதில்லை. சில ஆண்களுக்கு தன்னைவிட வயது குறைந்த பெண்களை பிடிக்கும். சில ஆண்களுக்கு தன்னையொத்த வயதுடைய பெண்களை பிடிக்கும். சில ஆண்களுக்கு தன்னைவிட வயதில் மூத்த பெண்களை பிடிக்கும். இப்படி ஒவ்வொரு ஆணுக்கும் தனித்தனி ரசனை உண்டு. இதில் ஆண்கள் வயதில் மூத்த பெண்களை விரும்ப என்னென்ன காரணங்கள் என்பது குறித்து இங்கு காணலாம். 

1. பக்குவமானவர்கள் : 

சில ஆண்கள் பக்குவமான பெண்களை விரும்புவார்கள். தனக்கு சமமான வயது அல்லது தன்னை விட வயது அதிகமுள்ள பெண்கள் தான் அவர்கள் தேர்வாக இருக்கும். தனிச்சையாக செயல்படுவது, பக்குவமான பேச்சு, சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தாமல் இருப்பது போன்றவை வயது மூத்த பெண்களை ஆண்களுக்கு பிடிக்கச் செய்கிறது. வயது மூத்த பெண்கள் எல்லா விஷயத்திற்கும் ஆண்களை சார்ந்து இருக்கமாட்டார்கள். சிக்கலான சூழ்நிலைகளை அவர்களே சமாளிக்கிறார்கள். ஆனால் எல்லா ஆண்களுமே இந்த மாதிரி எதிர்பார்ப்பதில்லை. சில பண்புகள் உள்ள ஆண்களே வயது மூத்த பெண்களிடம் காதல் கொள்கிறார்கள். 

இதையும் படிங்க:  முத்தம் கொடுக்கும் போது ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள் இவையே..!

2. மனமுதிர்ச்சி :

தன்னைவிட வயது மூத்த பெண்களிடம் ஆண்கள் ஈர்க்கப்பட காரணம் அவர்களுடைய மனமுதிர்ச்சி தான். எல்லா விஷயங்களையும் பக்குவமாக அவர்கள் கையாளும் விதம் தான் ஆண்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். ஏனெனில் இந்த ஆண்களும் பக்குவமானவர்கள். இவர்கள் தங்கள் மனதில் நினைப்பதை வெளிப்படையாக பேசிவிடுவார்கள். 

இதையும் படிங்க:   ஒருதலை காதலை மறக்க முடியாமல் அவதிப்படுறீங்களா..? உங்களுக்கான சில டிப்ஸ்.. 
 
3. தன்னம்பிக்கை கொண்டவர்கள்:

தன்னம்பிக்கை அதிகம் கொண்டிருக்கும் ஆண்கள் வயது மூத்த பெண்களின் மீது காதல் கொள்வார்கள். இவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். வயது மூத்த பெண் மீது காதல் கொள்வது, இவர்களை பொறுத்தவரை வித்தியாசமான விஷயமே இல்லை. இதனை இயல்பாகவே எடுத்துக் கொள்வார்கள். தங்களை மற்றவர்களுக்காக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பதற்றம் இவர்களிடம் இருக்காது.  தங்களுடைய விருப்பங்களுக்கு தயங்காமல் முக்கியத்துவம் கொடுப்பார்கள். 

4. சுதந்திரமானவர்கள் : 

சுதந்திரமாக வாழ விரும்பும் ஆண்களுக்கு வயது மூத்த பெண்கள் மீது காதல் வருகிறது.   இவர்கள் சுதந்திரத்தை விரும்புபவர்கள். தனக்கு விருப்பமான செயல்களை செய்ய தவறமாட்டார்கள். தனிமையை விரும்பினாலும் கூட பிறருடன் பழகும் போது ஜாலியாக இருப்பார்கள். சூழலுக்கு ஏற்றமாதிரி மாறிவிடுவார்கள். இந்த பண்புள்ள ஆண்கள் தன்னை போல சுதந்திரமாக வாழும் வயது மூத்த பெண்களை விரும்புவார்கள். 

5. வெளிப்படையாக பேசுவர்கள் :

வாழ்க்கையை பழமைவாதி போல அணுகமாட்டார்கள். பழங்காலத்தில் வாழாமல் புதுமையாக வாழ நினைப்பார்கள். எல்லாவற்றை வெளிப்படையா பேசும் ஆண்கள் பெரும்பாலும் வயது மூத்த பெண்களை விரும்புவார்கள். புதிய அனுபவங்கள் அவர்களுக்கு எப்போதும் தேவையாக இருக்கும்.  பிறரிடம் இருந்து கற்றுக் கொள்வதை உயர்வாக கருதுவார்கள்; தாழ்வு மனப்பான்மை இவர்களுக்கு இருக்காது. எந்த கட்டுப்பாடுகளுக்கும் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளமாட்டார்கள். பெண்கள் தங்களுடைய கண்ணோட்டத்தில் சொல்லும் விஷயங்களை புரிந்து கொள்ள முயற்சி எடுப்பார்கள்.  புரிதல் இல்லாத விஷயங்களை பின்பற்றுவது இவர்களுக்கு பிடிக்காது. பெண்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிப்பார்கள்.

6. புத்திசாலித்தனமாக உணர்வுகளை கையாளுதல்: 

உறவில் ஏற்படும் சிக்கலான விஷயங்களை சுமூகமாக தீர்க்கும் ஆற்றல் உள்ள ஆண்கள் வயது மூத்தப் பெண்களை விரும்புவார்கள். பிறர் சில விஷயங்களை உணர்வுப் பூர்வமாக அணுகாவிட்டாலும் அவர்களுடைய எண்ணங்களையும், உணர்வுகளையும் இவர்களால் புரிந்து கொள்ள முடியும்.  எல்லாவற்றையும் விமர்சனம் நோக்கோடு பார்க்காமல் மற்றவர்களை உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். 

7. மரியாதையுணர்வு: 

எல்லா உறவிலும் மரியாதை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.  நமக்கு விருப்பம் இருக்கிறதோ, இல்லையோ அனைவரையும் மதிக்க வேண்டியது அடிப்படையான விஷயம். பெரும்பாலும் தன்னைவிட வயதில் மூத்த பெண்கள் மீது விருப்பம் கொண்டிருக்கும் ஆண்கள் மதிக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். வயதில் மூத்த பெண்களை விரும்பும் ஆண்கள் பிறரிடம் மரியாதையாக நடந்து கொள்வார்கள் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் சமயத்தில் அதனை வேரிலிருந்து புரிந்து கொண்டு முடிவுகளை நிதானமாக எடுப்பார்கள். இருவருக்கிடையிலும் ஏதேனும் மனஸ்தாபம், கோபம் இருந்தால் அதனை பக்குவமாகப் பேசி சரி செய்ய முயற்சி செய்வார்கள். வீணாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்யமாட்டார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios