ஒருதலை காதலை மறக்க முடியாமல் அவதிப்படுறீங்களா..? உங்களுக்கான சில டிப்ஸ்..
Tips For Overcome One Sided Love : நீங்கள் ஒருவரை ஒருதலை பட்சமாக காதலித்து உங்களது மனதையும், ஆரோக்கியத்தையும் வீணடிப்பது சரியல்ல. எனவே, அதிலிருந்து வெளியே வாருங்கள்.
'ஒன் சைடு லவ்' திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் தான் பார்ப்பதற்கு நன்றாக தோன்றும். ஆனால், நிஜ வாழ்க்கையில் அது வலியையும், துன்பத்தையும் மட்டுமே கொடுக்கும். சற்று யோசித்துப் பாருங்கள், நீங்கள் ஒருவரை ஆழமாக நேசித்தால் அந்த நபர் உங்களை நேசிக்கவில்லை (அ) உங்களது உணர்வுகளை தெரியாமல் இருந்தால் அது ஒரு மோசமான சூழ்நிலை. அதுமட்டுமின்றி, ஒரு தலைப்பட்சமாக காதலிப்பவர்கள் தங்களது நேரத்தை தேவையில்லாமல் வீணடிக்கிறார்கள். அவர்கள் நேசிப்பவர்கள் இடமிருந்து நேர்மறையான பதில் கிடைக்காது என்று தெரிந்தவுடன் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.
அப்படியானால், இந்த நிலை வருவதற்கு முன் அதிலிருந்து நகர்வதை பற்றி யோசிப்பது நல்லது. நிச்சயமாக இது செய்வது மிகவும் கடினமாக தான் இருக்கும். ஆனால், சாத்திய மற்றதல்ல. எனவே, இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உதவி பெற தயங்க வேண்டாம்:
நீங்கள் ஒருவரை ஒருதலை பட்சமாக காதலித்து அது சக்ஸ் ஆகவில்லை என்றால், அந்த நபர் மற்றும் அந்த நபரை குறித்த நினைவுகள் மற்றும் உணர்வுகளை விட்டுவிட்டு முன்னேறுவது மிகவும் கடினம்தான். ஆனால், அந்த நினைவுகளில் சிக்கி வாழ்வது இன்னும் உங்களுக்கு வேதனையை தான் கொடுக்கும். எனவே, அத்தகைய சூழ்நிலையில் அதிலிருந்து முன்னேறுவது தான் சிறந்த வழி. எனவே, இது குறித்து உங்களது நண்பர்கள் அல்லது நெருங்கிய நபரிடம் சொல்ல தயங்க வேண்டாம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து உங்களை அதிலிருந்து விடுவிக்க, பல நேரங்களில் அத்தகைய நபர்களின் ஆலோசனை உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க: செக்ஸ் வாழ்க்கையில் ஆண்கள் இப்படி பண்ணினால் பெண்களுக்கு ரொம்ப புடிக்குமாம்!!
தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்:
நீங்கள் ஒரு தலைப்பட்ச காதலில் இருந்து வெளிவர, உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இது உங்களது கவனத்தை நிச்சயமாக திசை திருப்பும். எனவே, நீங்கள் விரும்பும் விஷயங்களைச் செய்ய நேரம் ஒதுக்குங்கள். மேலும் புதிய விஷயங்களையும் கற்றுக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு நல்ல முன்னேற்றத்திற்கு உதவும். எந்த ஒரு கடினமான கட்டத்தையும் சமாளிக்க உங்களை பிஸியாக வைத்திருப்பது ஒரு நல்ல தீர்வாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் பொழுதுபோக்குகளுக்கு நீங்கள் நேரம் கொடுப்பது, உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உங்களது நம்பிக்கையும் அதிகரிக்கச் செய்யும்.
இதையும் படிங்க: திருமணமானவர்கள் யாருக்கும் சொல்லவே கூடாத 5 விஷயங்கள் பத்தி தெரியுமா? மீறி பகிர்ந்தால் வாழ்க்கையே போச்சு!!
உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்:
நீங்கள் ஒருவரே ஒரு தலைப்பட்சமாக காதலிக்கிறீர்கள் உங்களது காதலை அந்த நபர் கண்டிப்பாக புரிந்து கொள்வாய் என்ற கற்பனை உலகில் இருந்து முதலில் வெளியே வாருங்கள். காரணம், நீங்கள் அந்த நபரை எவ்வளவு தான் காதலித்தாலும் அது ஒரு தலை பட்ச காதல் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களது காதலுக்கும் அந்த நபருக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும், இந்த உறவின் சுமையை நீங்கள் நீண்ட காலம் தாங்க முடியாது. எனவே, உண்மையை ஏற்றுக்கொண்டு முன்னேறுங்கள்.