Asianet News TamilAsianet News Tamil

மத்திய அரசு அறிவித்த ரெட் அலர்ட்.. டெல்லியில் நடந்த மதக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஈரோட்டில் அதிகமாம்.!!

இந்தியாவில் கொரோனா பாதிக்கும் அபாயம் இருக்கும்,16 இடங்கள் மத்திய அரசால் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் தமிழகத்தில் ஈரோடு இடம் பெற்றிருக்கிறது. இது தமிழக மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. டெல்லி யில் நடந்த இஸ்லாமிய மதக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்றவர்கள் பட்டியலில் ஈரோட்டில் இருந்து தான் அதிகமாக சென்றிருக்கிறார்களாம்.

Red alert announced by central government ..
Author
Erode, First Published Mar 31, 2020, 9:04 PM IST

T.Balamurukan

இந்தியாவில் கொரோனா பாதிக்கும் அபாயம் இருக்கும்,16 இடங்கள் மத்திய அரசால் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் தமிழகத்தில் ஈரோடு இடம் பெற்றிருக்கிறது. இது தமிழக மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. டெல்லி யில் நடந்த இஸ்லாமிய மதக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்றவர்கள் பட்டியலில் ஈரோட்டில் இருந்து தான் அதிகமாக சென்றிருக்கிறார்களாம்.

Red alert announced by central government ..Red alert announced by central government ..

இந்தியாவில் இதுவரை 1,250 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 32 பேர் கொரோனா பாதித்து பலியாகி இருக்கிறார்கள். இதில் 102 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம் உள்ள, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்களை மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

1. ஈரோடு, தமிழ்நாடு,2. தில்ஷாத் கார்டன், டெல்லி.3.நிஜாமுதீன்,டெல்லி 4.பத்தனம்திட்டா, கேரளம்.5. காசர்கோடு, கேரளம்6. நொய்டா, உத்தரப்பிரதேசம்7. மீரட், உத்தரப்பிரதேசம்8. பில்வாரா, ராஜஸ்தான்9. ஜெய்ப்பூர், ராஜஸ்தான்10. மும்பை, மகாராஷ்டிரம்11. புணே, மகாராஷ்டிரம்12. ஆமதாபாத், குஜராத்13. இந்தூர், மத்தியப் பிரதேசம்14. நவன்ஷஹர், பஞ்சாப்15. பெங்களூரு, கர்நாடகம்16. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்

Red alert announced by central government ..

இந்த 16 இடங்களிலும், கொரோனா நோயாளிகள் அதிகம் பேர் கண்டறியப்பட்டிருக்கிறது. இவை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய பகுதிகளாகக் கண்டறியப்பட்டு அறிவித்திருக்கிறது மத்திய அரசு.ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்த நோயினால் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. 

 ஈரோட்டில் 16,456 குடும்பங்களைச் சார்ந்த 57,734 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க் கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.  கடந்த 11 ஆம் தேதி தாய்லாந்து நாட்டில் இருந்து 7 நபர்கள் ஈரோட்டிற்கு வந்து சுல்தான்பேட்டை மசூதியில் தங்கியிருந்தனர். இந்த நபர்கள் 14 ஆம் தேதி முதல் கொல்லம் பாளையம் மசூதியில் தங்கியிருந்தனர்.இதனையடுத்து அங்குத் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 நபர்கள் 16 ஆம் தேதி பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது ரத்த மாதிரியைச் சோதனை செய்ததில் 2 நபர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

Red alert announced by central government ..
 82 நபர்கள் அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.அதில் 28 ஆம் தேதி வரை 6 நபர்களுக்கும்,அதனை தொடர்ந்து தொடர்ந்து நேற்றும்,இன்றும் சேர்த்து 14 நபர்களுக்கும் சேர்த்து இதுவரை 20 பேர் ஈரோடு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios