“கிட்டத்தட்ட கல்யாணம் ஆயிடுச்சு.. ஆனா..” தனது காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்த ரத்தன் டாடா

ரத்தன் டாடா ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக இருந்தும், தனது செல்வத்தையோ செல்வாக்கையோ ஒரு போதும் பெரிதாக கருதியதில்லை.

Ratan Tata Open Talk on Love Life "Almost Married.. But"

பிரபல இந்திய தொழிலதிபரும், பெரும்பணக்காரர்களில் ஒருவருமான ரத்தன் டாடா, உலகெங்கிலும் உள்ள தொழில்முனைவோர் மற்றும் எலோன் மஸ்க் போன்ற தொழில் அதிபர்களால் போற்றப்படும் நபராக இருக்கிறார். , டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான அவர் தனது தொண்டு பணிகளுக்காக நன்கு அறியப்பட்டவர். ரத்தன் டாடா ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக இருந்தும், தனது செல்வத்தையோ செல்வாக்கையோ ஒரு போதும் பெரிதாக கருதியதில்லை. டாடா மோட்டார்ஸ் கணிசமான ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு அவரது தலைமையின் கீழ் இருந்ததால், அவர் பல தொழில் அதிபர்களால் மதிக்கப்படுகிறார்.

எனவே பலருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார் ரத்தன் டாடா. அவர் இளம் மிக இளம் வயதிலேயே டாடா குழும நிறுவனத்திற்கான பல்வேறு வணிக யோசனைகளை வழங்கினார் என்பது பற்றி யூடியூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டா ரீல்கள் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் பல வீடியோக்கள் வலம் வருகின்றன.

ரத்தன் டாடாவின் புதுமையான, ஆக்கப்பூர்வமான வணிக யோசனைகள் பல்வேறு தரப்பினருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் ரத்தன் டாடாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பலர் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக  அவர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பலரின் கேள்வியாக உள்ளன. இந்த நிலையில் Humans of Bombay என்ற நிறுவனத்தால் பகிரப்பட்ட ஒரு போட்காஸ்டில் ரத்தன் டாடா தனது திருமணம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் போது தனக்கு நடைபெற இருந்த திருமணம் குறித்து தெரிவித்துள்ளார். 

ரத்தன் டாடா ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?

ரத்தன் டாடா தனக்கு பல காதல் உறவுகள் இருந்ததாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார், ஆனால் எதுவும் திருமண பந்தமாக மாறவில்லை என்று கூறினார். இருப்பினும், ரத்தன் டாடா லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்த போது ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்யவும் முடிவு செந்திருந்தார். ஆனால் தனது உடல்நிலை சரியில்லாத பாட்டியை அவர் இந்தியா வந்துவிட்டார். அப்போது அந்த பெண்ணுக்கும் ரத்தன் டாடாவுக்கும் இந்தியாவில் திருமணம் நடைபெற இருந்தது.. இருப்பினும், இந்திய-சீனா போர் வெடித்த பிறகு, அப்பெண்ணின் பெற்றோர் அவளை இந்தியாவுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை, இதனால் இருவரும் பிரிந்துவிட்டனர். ரத்தன் டாடாவின் திருமணம் நடைபெறவில்லை.

ஆனால் அதன் பிறகு வேறு காதல் உறவுகள் இருந்ததாகவும், தனது மனைவி என்று அழைக்கக்கூடிய யாரையும் தான் காணவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ரத்தன் டாடா "ஆனால் இன்று நான் திரும்பிப் பார்க்கும்போது, ஒரு நொடி கூட நான் எதற்கும் வருத்தப்படவில்லை." என்று தெரிவித்தார். மேலும் தனது பெற்றோரின் விவாகரத்துக்குப் பிறகு தனது பாட்டியுடன் வாழ்ந்தது குறித்தும் ரத்தன் டாடா பேசி இருந்தார். 

3,400 ஆண்டுகள் பழமையான நகரம் நதிக்கு அடியில் கண்டுபிடிப்பு.. வறட்சியால் வெளிவந்த வரலாற்று உண்மை..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios