இவரை நினைவிருக்கிறதா..? டி ஷர்ட்டில் கலக்கும் ரயில்வே ஸ்டேஷன் பாடகி "ராணு மண்டால்"..!

எத்தனையோ பேருக்கு திறமை இருந்தும் அதனை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடுமா என்றால் கிடையாது. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு சமீபத்தில் கல்கத்தா ரயில்வே நிலையத்தில் பிச்சை எடுத்தவாறு பாட்டு பாடிய  ராணு மண்டாலுக்கு கிடைத்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.... 

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..! எவ்வளவு ரூபாய் தெரியுமா..?

இவர் பாடிய ஒரு பாடலை சகபயணிகள் ஒருவர் போகும் வழியில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட அனைவரும் அவருக்கு பாராட்டு மழை தெரிவித்து இருந்தனர்.பின்னர்  ஒரே இரவில் அனைவராலும் அறியப்பட்ட இவருடைய திறமையை பார்த்து அனைவரும் ஆதரவு தெரிவிக்கவே பிரபல பாலிவுட் இசையமைப்பாளரும்,பாடகருமான ஹிமேஷ் ரெஷ்மியா ஒரு வாய்ப்பை வழங்கினார்.பின்னர்  சல்மான்கானும் இவருக்கு 50 லட்சத்தில் ஒரு வீடு வாங்கிக் கொடுத்ததாகவும் பேசப்பட்டது.

அதன் பின்னர் அவருடைய வாழ்க்கை  முறையே மாறி விட்டது. உடுத்த உடை இல்லாமல், உண்ண உணவு இல்லாமல், தட்டி கொடுக்க ஆள் இல்லாமல் இருந்த ராணு இன்று ஆளே அடையாளம் தெரியாத வண்ணம் உருமாறி அழகான, அருமையான வாழ்க்கை வாழ்கிறார்.  இதன் அடுத்த  நகர்வாக அவருடைய ஆடையிலும் அப்படி ஒரு மாற்றம்..அழகான டி ஷர்ட் அணிந்து கொண்டு மிக ஓய்யாரமாக போஸ் கொடுத்து உள்ளார் ராணு.

ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து இருந்தபோது எப்படி அவருடைய வாழ்க்கை இருந்தது என்பது தற்போது மறந்து போயிருக்கும் போல ..காசு பணம் பார்த்தவுடன் எவ்வளவு தலைக்கனம் இந்த பாடகிக்கு?.. என மனதில் தோன்றியவாறு வறுத்து எடுக்கின்றனர் நெட்டிசன்கள்