மாலத்தீவு  பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால்,தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து  உள்ளது

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மற்றும்  மாலத்தீவு பகுதியில்,மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின்  உள்மாவட்டத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது  ,சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ஏப்ரல் 7 முதல் 11 ஆம் தேதி வரை

ஏப்ரல் 7 ஆம் தேதியன்று - வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்றும்,

ஏப்ரல் 8  - நாளை  தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும்,இடியுடன் கூடிய கனமழை  இருக்கும் என்றும் சூறை காற்றுடன் பலத்த  மழை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது

ஏப்ரல்  9,10,11 -  தமிழகம்   மற்றும் புதுச்சேரியில் மிதமான  மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறப் பட்டு உள்ளது.

வெப்பநிலை பொறுத்தவரை,அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பமும்,  குறைந்தபட்சமாக  27 டிகிரி  செல்சியஸ் வெப்பமும்  இருக்கும் என தெரிவிக்கப் பட்டு  உள்ளது.