கொட்டி தீர்த்த மழை ..!  குளு குளு மழையில் நனைந்த தமிழக மக்கள் ..!  

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் வரும் மார்ச் 6 ஆம் தேதி முதல் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வெதர்மேன் தெரிவித்து இருந்த நிலையில் இன்று நாகர்கோவிலில் பெய்த கனமழையால் தெருவெங்கும் பெருக்கெடுத்து ஓடியது மழை நீர். சில  மணி நேரம் மட்டுமே பெய்த திடீர் கனமழையால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி  அடைந்துள்ளார்.

அதிலும் குறிப்பாக கோடை வெயில் தொடங்கிய நிலையில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வந்தது. இந்த ஒரு நிலையில் எதிர்பாராத தருணத்தில் திடீரென பெய்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

"

இந்த நிலையில்  தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மதுரை கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் மற்ற பகுதிகளான புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட நிலை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒரு நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் 4 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.