ஆன்லைனில் இனி ஒரே நேரத்தில் 12 ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

IRCTC தளத்தின் மூலம் நிறைய பயணிகள் ஆன்லைன் மூலம் தங்களது பயணத்திற்கான டிக்கெட்டை முன் பதிவு செய்கின்றனர். 

இத்தளத்தில் அணுகுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தளம் எப்போதும் மெதுவாகவே இயங்கும். இக்குறையைப் போக்க சில தனியார் இணையதளங்களும் உள்ளன.

ஆன்லைனில் முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட்டுகள் எண்ணிக்கை முதலில் 6 ஆக இருந்தது. ஆனால் தற்போது, ஆன்லைனில் இனி ஒரே நேரத்தில் 12 ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆதார் மற்றும் மொபைல் எண்களை இணைப்பது அவசியம் எனவும் அவை இருந்தால் மட்டுமே 12 டிக்கெட்டுகள் புக்கிங் செய்வது சாத்தியம் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதைதொடந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு 9 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்குகிறது என்பது குறிப்பிடதக்கது.