Asianet News TamilAsianet News Tamil

சென்னையில்...நடக்க கூடாதது நடந்து விட்டது....! விற்பனைக்கு வந்தது சுத்தமான காற்று..!

pure air sales in chennai for first time in the history
pure air sales in chennai for first time in the history
Author
First Published Jun 21, 2018, 5:17 PM IST


நடக்க கூடாதது நடந்து விட்டது....! சென்னையில் சுத்தமான காற்று விற்பனை...!

சென்னையில் சுத்தமான காற்று விற்பனைக்கு வந்துள்ளது என்ற தகவல்  அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தி உள்ளது

மரங்கள் வெட்டப்பட்டு நவீன உலகிற்கு மாற நினைக்கும் நமக்கு, இயற்கை என்றால் என்ன என்பதற்கு கூட அர்த்தம் தெரியாமல் போய் விடும் போல்  இருக்கு... தற்போது மாறி வரும் இந்த உலகை பார்க்கும் போது...

இந்தியாவை பொறுத்தவரையில் அதிக மாசுக்காற்று  உள்ள இடம் என்றால் டெல்லி என யோசிக்காமல் சொல்வார்கள்..

அந்த அளவிற்கு அங்கு காற்று மாசு பட்டிருக்குமோ என்ற கேள்வி எழும்.. அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், வாகனங்களில் இருந்து வெளிவரும் கரும்புகை முக்கிய காரணமாக கூறப்பட்டது.

pure air sales in chennai for first time in the historyஇதனால் மக்களுக்கு பல உடல் நலக்கோளாறு ஏற்படுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ..எப்படியாவது இயற்கை வளங்களை பேணி காக்க வேண்டும் விவசாயத்தை மேம்படுத்திட வேண்டும்..விவசாயம் அழியக் கூடாது என தினம் தினம் போராடி வரும் இந்த தமிழகத்தில் தான், தற்போது  தூய்மையான காற்று விலைக்கு வந்துள்ளது

எதற்கெடுத்தாலும் மரம் வெட்டி, இருக்கும் நிலங்கள எல்லாம் பிளாட்  போட்டு விற்பது முதல், சாலைகள் அமைக்க அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் விவசாயம் நிலம் வரை....அனைத்தையும் வைத்து பார்த்தால் இயற்கையான முறையில்  இனி வாழ்வதற்கு முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டுள்ளது என்றே கூறலாம்...

சென்னையில் இன்று...

தமிழகத்தின் தலைமை இடமான சென்னையில் தற்போது சுத்தமான காற்று விலைக்கு வந்து உள்ளது. இது தனியார் நிறுவனம் (பிளிப்கார்டிலும் கிடைக்கிறது)

விலை எவ்வளவு தெரியுமா ..?

6 லிட்டர் ஆக்ஸிஜன் விலை : ரூ. 635

பொதுவாக தெரு தெருவாக சிம் கார்டு தான் நிழற்குடை போட்டு விற்பனை செய்து வந்தனர். இனி சுத்தமான காற்று வாங்க கூட தெரு தெருவா அலைய வேண்டிய நிலை உருவாகும் என்பதில் எந்த விதமாற்றமும் இருக்காது  என்ற நிலையை இப்போதே உணர வைத்து உள்ளது இந்த விவகாரம்.

Follow Us:
Download App:
  • android
  • ios