அட.. புளியில் சட்னி கூட செய்யலாம்.. ரெசிபி இதோ!!
Puli Chutney Recipe : இதுவரை நீங்கள் புளி சட்னி சாப்பிடவில்லை என்றால், அது எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய போறீங்களா? இதற்கு சைடு டிஷ் ஆக என்ன செய்வது என்று தெரியவில்லையா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான். நீங்கள் எப்போதும் இட்லி மற்றும் தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, பூண்டு சட்னி, வேர்க்கடலை சட்னி, புதினா சட்னி என்றுதான் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால், புளியில் சட்னி செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? கண்டிப்பாக சாப்பிட்டு இருக்க மாட்டீங்க.
சொல்லப்போனால், இப்போது தான் இந்த சட்னி பத்தி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த புளி சட்னி சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும் அது மட்டும் இது செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது சுலபமான முறையில் செய்து விடலாம். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த சட்னி செய்து கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் புளி சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: நாவூறும் கிராமத்து சின்ன வெங்காய சட்னி.. ரெசிபி இதோ..!
புளி சட்னி செய்ய தேவையான பொருட்கள் :
துருவிய தேங்காய் - 1/2 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
உளுந்தம் பருப்பு - 3 ஸ்பூன்
வர மிளகாய் - 4
கடுகு - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - சின்ன எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: மூட்டு வலிக்கு சத்தான பிரண்டை சட்னி.. எப்படி செய்யணும் தெரியுமா?
செய்முறை :
குழியில் சட்னி செய்ய முதலில் அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உளுந்தம் பருப்பு, வரமிளகாய், புளி, பெருங்காயத்தூள் ஆகியவற்றை போட்டு வதக்கவும். பின் அவற்றை அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும். அதன் பிறகு அதே கடாயில் தேங்காய் சேர்த்து மிதமாக வதக்கவும் அளவுக்கு அதிகமாக வதக்க கூடாது. இல்லையெனில், சுவை மாறிவிடும். பிறகு தேங்காயையும் ஆற வைக்கவும். அதுபோல வெங்காயத்தையும் வதக்கி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மையாக அரைக்கவும். பின் அதை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இதனை அடுத்து, ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் தாளித்த இதனை தயாரித்து வைத்த சட்னியுடன் சேர்த்து நன்றாக கலக்கவும் அவ்வளவுதான் சுவையான புளி சட்னி தயார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D