Asianet News TamilAsianet News Tamil

நாவூறும் கிராமத்து சின்ன வெங்காய சட்னி.. ரெசிபி இதோ..!

Small Onion Chutney Recipe : இந்த கட்டுரையில் கிராமத்து ஸ்டைலில் சின்ன வெங்காய சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

village style chinna vengaya chutney recipe in tamil mks
Author
First Published Sep 7, 2024, 6:30 AM IST | Last Updated Sep 7, 2024, 6:30 AM IST

இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசைக்கு எப்பவும் ஒரே மாதிரியான சைடு டிஷ் சாப்பிட்டு போரடித்துவிட்டதா..? வித்தியாசமான சுவையில் ஏதாவது சாப்பிட விரும்புகிறார்களா? அப்படியானல் இந்த பதிவு உங்களுக்கு தான். 

உங்களுக்கு கிராமத்து ரெசிபி பிடிக்குமா? அப்படியானால், ஒருமுறை வெங்காய சட்னி செய்து சாப்பிடுங்கள். இந்த சட்னி சாப்பிடுவதற்கு ரொம்பவே சூப்பராக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த ரெசிபி செய்ய அதிக நேரம் எடுக்காது. விரைவில் செய்துவிடலாம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த சட்னி ஒருமுறை செய்து கொடுங்கள். அவர்கள் எக்ஸ்ரா இரண்டு இட்லி வாங்கி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் கிராமத்து ஸ்டைலில் வெங்காய சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: மூட்டு வலிக்கு சத்தான பிரண்டை சட்னி.. எப்படி செய்யணும் தெரியுமா?

கிராமத்து ஸ்டைலில் வெங்காய சட்னி செய்ய தேவையான பொருட்கள் : 

சின்ன வெங்காயம் - 20
வரமிளகாய் - 5
பூண்டு - 5
புளி - சிறிதளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் -  தேவையான அளவு

இதையும் படிங்க: இட்லி, தோசைக்கு இப்படி ஒருமுறை சட்னி செஞ்சு கொடுங்க.. எக்ஸ்ட்ரா ரெண்டு சாப்பிடுவாங்க!

செய்முறை :

கிராமத்து ஸ்டைலில் வெங்காய முதலில், அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் வரமிளாக், புளி போட்டு நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு  அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போட்டு சிறிது நேரம் வதக்கவும். பின் அதை அடுப்பில் இருந்து கீழே இறக்கி, ஆற வைக்கவும். அவை ஆறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, இதனுடன் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.  பின் அரைத்த இதனை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

இதனை அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின் அதை அரைத்த வெங்காயம் சட்னியில் சேர்த்து, கிளறிவிடவும். அவ்வளவு தான் ருசியான கிராமத்து ஸ்டைலில் வெங்காயம் சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios