International Women’s Day 2022: இன்று சர்வதேச மகளிர் தினம், உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் சிறப்பாக, 29 பெண்களுக்கு  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், விருதுகளை வழங்குகிறார்.

இன்று சர்வதேச மகளிர் தினம், உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் சிறப்பாக, 29 பெண்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், விருதுகளை வழங்குகிறார்.சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

பெண்கள் சிறுமிகளாக இருக்கும்போதே அவர்களிடம் ஒருங்கிணைக்கும் ஆற்றலும், வழி நடத்திச்செல்லும் ஆற்றலும் உருவாகிவிட்டதை நம்மால் ஒவ்வொரு வீட்டிலும் காண முடியும். அதுபோல் கற்றுக்கொள்ளும் திறனும், கற்றதை வெளிப்படுத்தும் திறனும் பெண்களிடம் அதிகம் இருக்கிறது. இதனைபோற்றும் விதமாக வாழ்வில் சாதனை புரியும் பெண்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகிறது. 

மேலும் படிக்க...International Women’s Day 2022: பெண்களே உங்கள் உரிமைகளை மீட்டெடுக்கும் 6 சட்டங்கள்! கட்டாயம் தெரிச்சுக்கோங்கோ..?

பெண் சக்தி விருது:

ஆண்டுதோறும், விவசாயம், கண்டுபிடிப்பு, சமூகப்பணி, தொழில்துறை, கல்வி, கலை, இலக்கியம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் அசாதாரண பங்களிப்பை அளித்த பெண்களையும், நிறுவனங்களையும் அங்கீகரிக்கும் வகையில் பெண் சக்தி விருது வழங்கப்படுகிறது.

இதையொட்டி 2020, 2021-ம் ஆண்டுகள் பட்டியலில் இடம்பெற்ற பெண் சக்தி விருதுகள் 29 பெண்களுக்கு கிடைத்திருக்கிறது. அதன்படி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த விருதுகளை இன்று வழங்குகிறார். 

பிரதமர் மோடி புகழாரம்: 

இந்நிலையில், இந்த விருது பெறும் பெண்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினர்.அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்கள் முத்திரையை பதித்துள்ளதாக பிரதமர் மோடி அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..International Women’s Day 2022: வாழ்வில் வெற்றி பெற்ற பெண் பிஸ்னஸ் ஐகான்களின் குணாதிசியங்கள்..!

லிஸ்டில் யார் யார் ..?

பழங்குடியின செயல்பாட்டாளர் உஷாபென் தினேஷ்பாய் வாசவா, கண்டுபிடிப்பாளர் நசிரா அக்தர்,சமூக தொழில்முனைவாளர் அனிதா குப்தா, இன்டெல்-இந்தியா நிறுவன தலைமை நிர்வாகி நிவ்ருதி ராய் உள்ளிட்டோர் இந்த பெண் சக்தி விருது பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.