International Women's day 2023: மார்ச் 8ஆம் தேதி இன்று  சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.அதன் சிறப்பாக, வாழ்வில் வெற்றி பெற்ற பெண்களிடம் இருக்கும் பொதுவான பண்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

தொழில் துவங்குவதற்கான மூலதனத்தைப் பெறுவதில், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பெரும் இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இன்னும் நமது சமூகத்தில் ஆண்களுக்கு கிடைக்கும் அதே சலுகை பெண்களுக்கு கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி, தொழில் துவங்க நினைக்கும் பெண்களை சமூகம் கேலி செய்து, பல இடங்களில் அவர்களை முடக்கிவிடுகிறது. தொழில் நிறுவனங்களை இயக்குவதற்கு ஆண்கள்தான் தகுதியானவர்கள் என்ற எண்ணமே இதற்கு முக்கியக் காரணம். 

இருப்பினும், இவற்றைக் கடந்துவாழ்வில் வெற்றியடைந்த பெண் தொழில்முனைவோர்கள், தாங்கள் சமாளித்த சவால்கள் மற்றும் தங்களின் வளர்ச்சி போன்றவற்றில், ஒரே மாதிரியான மனநிலையைக் கொண்டுள்ளனர். 

இப்படி பல துறைகளில் வெற்றியாளர்களாக மகுடம் சூடிய பெண்களிடையே காணப்படும் பொதுவான சில பண்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

விடாமுயற்சியே விஸ்வ ரூப வெற்றியைத் தரும்:

சில நேரங்களில், வெற்றிக்கும், தோல்விக்கும் இடையிலான வேறுபாடு உங்களுக்கான சரியான தொழிலைத் தேர்வு செய்வதைப் பொருத்து அமையும். சில சமயங்களில் சந்தை நிலவரம் (market conditions) உங்களுக்கு சாதகமாக இல்லாமல் போகும். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், நீங்கள் தேர்வு செய்யும் தொழில் உங்களுக்கு வெற்றியடையாமல் போகும். இறுதியில் உங்களது விடாமுயற்சியே வெற்றியைத் தரும் என்பதை ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

வெற்றிக்கு தோல்வியே முதற்படி என்பதை உணர்ந்தவர்கள்..!

 தொழிலில் வெற்றியடைந்த தொழில்முனைவோர் அனைவரும், மீண்டும் மீண்டும் ‘முயற்சிப்பது’ மற்றும் விடா முயற்சி போன்ற இந்த இரண்டு விஷயங்களையும் கண்டிப்பாக கடைபிடிப்பவர்கள். எனவே, புதிதாக ஒரு தொழிலை உருவாக்க நினைக்கும் பெண் தொழில்முனைவோருக்கு இந்த இரண்டு விஷயங்களும் அவசியமானவையாகும்.

எப்போதும் ‘பாசிட்டிவான' எண்ணங்கள் கொண்டிருப்பார்கள்:

நம்முடைய தொழிலில், எல்லாம் நமக்கு சாதகமாக இருந்தால் நமக்கு எப்போதும் ‘பாசிட்டிவான' எண்ணங்களே ஆக்கிரமித்திருக்கும். அதேசமயம், தொழில் 'நெகட்டிவாக' செல்லும் பட்சத்தில் பெரும்பாலான தொழில்முனைவோருக்கு அதிலிருந்து வெளியேறும் எண்ணமே தோன்றும். வெளியேறும் எண்ணம் உள்ளவர்கள் தொழிலில் வெற்றி அடைந்ததில்லை. எந்த நிலையிலும் விடாமல் முயற்சி செய்தவர்களே வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க...International Women's Day 2023: மகளிர் தினம் ஏன் பெண்களுக்கு முக்கியம்..!அதன் பின்னணி என்ன தெரியுமா..?

 சிறந்த சிந்தனையாளர்களாக இருப்பவர்கள்:

தொழிலில் வெற்றிபெற்ற பெண் தொழில்முனைவர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களாக இருப்பவர்கள். யோசனைகள், அறிவு, தொடர்புகள் போன்றவற்றைப் பகிர்தல், நம்பிக்கையின் மூலம் எளிதில் உறவுகளை உருவாக்குதல் போன்றவை சிந்தனையாளர்களின் பொதுவான முக்கியப் பண்புகள் ஆகும்.

சொந்த முடிவுகளை தங்களே எடுப்பார்கள்..!

இவர்கள் பெரும்பாலும், மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்பவர்கள். இருப்பினும், இறுதி முடிவை தாங்கள் மட்டுமே எடுப்பார்கள். குறிப்பாக, தாங்கள் எடுக்கும் முடிவுகள், தாங்கள் கொண்டிருக்கும் தகவல்களையும் (information), விவரங்களையும் பொறுத்தே அமையும்.