உழவர் திருநாள் என்பது உலக தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் மிக முக்கியமானது பொங்கல் திருநாளாகும். இதை அறுவடை திருநாள் என்றும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்களை உயர்த்தி நன்றி சொல்லும் நாளாக இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது. தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை, கால்நடைகளுக்கு தமது நன்றி மட்டும் மகிழ்ச்சியை தெரிவிக்கும் மாபெரும் பொங்கல் திருநாள்.

இந்த திருநாளை காணும் பொங்கல் என்றும் அழைக்கலாம். இந்த உழவர் திருநாளை பொங்களின் கடைசி நாளாக கருதப்படுகிறது. ஆடி மாதம் விதைத்த பயிர்களின் அமோக விளைச்சலை அறுவடை செய்யப்பட்டு பயன் அடையும் அந்த மாதமே பருவமே தை மாதம். இதில் சக்கரை, பால், நெய் சேர்த்து பானையில் கொதிக்க வைத்து பொங்கலாக்கி அதை சூரியனுக்கும், அடுத்தநாள் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

இந்த நாளில் இயற்கைக்கு நன்றி சொல்லி, புத்தம் புதிய ஆடைகள் அணிந்து, நம் வீட்டை சுற்றி இருக்கும் சொந்த பந்தங்கள் எல்லோருக்கும் பரிசுகள் வழங்கி விழாவை மிக சிறப்பாக மகிழ்ச்சியாக கொண்டாடி பொங்கலை வழிநடத்துகின்றனர். பல நாடுகள் இந்த தமிழர்கள் பண்பாட்டிக்கு மாறி வருகின்றனர். "பொங்கலோ பொங்கல்'' இந்த வார்த்தை தான் அந்த நாளின் முக்கியத்துவம்.

நாம் நினைப்போம் இன்று இந்த பொங்கல் கலாச்சாரம் மெல்ல மெல்லமாய் குறைந்து வருகிறது. ஆனால் பல வகைகளில் கரும்பு, இஞ்சி தேடி வாங்கிப் படைக்கும் வழக்கம் இன்றும் தொடர்கிறது. பண்டிகை மட்டுமே ஒரு இனத்தின் கலாச்சாரத்தின் பேணி காப்பது மிகையாகாது. இனி ஒவ்வொரு பண்டிகையிலும்  ஒரு சமுக நோக்கத்தை உணரலாம்.

தை பிறந்தால் வழிப்பிறக்கும் என்பது பழமொழி. தை மாதத்தின் முதல் தேதி ''பொங்கல் பண்டிகை'' கொண்டாப்படுகிறது. இந்து பண்டிகைகள் ஆன்மிகம் மட்டுமின்றி, அறிவுக்கும் விருந்தளிப்பதாகவே இருக்கும். அறிவு மட்டுமே மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. இங்க தேவைகளுள் அடிப்படையான தேவைகள் – உணவு உடை உறைவிடம் என்பர்.