உறவினர்கள்,நண்பர்கள், அனைவரையும் வரவழைத்து விளையாட்டு போட்டிகள் வைத்து அன்று மிக மிக மகிழ்வான தருணங்களாக இருக்கும்.  குறிப்பாக கபடி,வழுக்கு மரம்,பானை உடைத்தல் போன்ற விளையாட்டுகளை விளையாடுவார்கள்.
இரவு நேரங்களில் ஆடல் பாடல் என ஊரே கொண்டாட்டத்தின் உச்சியில் இருப்பார்கள்.  


   
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு இந்நாளில் நடைபெறும். குறிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மிக பிரபலம். முன் காலத்தில் கிராமங்களில் ஊர்த்தலைவகள்,நாட்டாமை,ஜமீன்தார்கள் போன்றவர்கள் சொந்தமாக காளைகளை வளர்த்துவார்கள்.. ஜல்லிக்கட்டும் அவர்களே நடத்த செய்வார்கள்.பின் ஏராளமான பரிசுகளை வழங்குவார்கள்.மேலும் அவர்களுடைய காளையை அடக்குபவர்களுக்கு தன் மகளையே மணம் முடிப்பார்கள்.மேலும் வீராதிவீரன் என்று பெயர் சூட்டி கௌரவிப்பார்கள்.

பசுமாடு தன்னை வருத்தி கொண்டு மனிதர்களுக்கு தொண்டுகள் செய்கின்றது.. முன் காலத்தில் விவசாயம் செய்யவும், ஏர்தழுவுதல் போன்ற வேலைகளை செய்ய அதிகம் பயன் படுத்தினார்கள்..
பசு மாடு குழந்தகைகளுக்கு ஓர் தெய்வம் போன்றது.. பசுவின் பால் அமிர்தம் போன்றது. குழந்தைகள் நன்றாக,தென்பாக,பலசாலிகாக வளர பசும்பால் முக்கிய பங்கு.