பிரதமர் சொன்ன முக்கிய விஷயம்..! இப்படி ஒரு பாதிப்பு இருப்பதை மக்கள் உணர்வார்களா..?

இந்தியாவில் மெல்ல மெல்ல உயர்ந்து வரும் கரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் ஆங்காங்கு தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உறுதி செய்யப்பட்டு வருகிறது இதன்படி தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

தற்போது வரை கொரோனா வைரஸ் இந்தியாவில் 400 பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். பலரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த ஒரு நிலையில் கொரோனா தாக்கம் குறித்து பெரிதளவில் எடுத்துக் கொள்ளாமல் நேற்று ஒரு நாள் மட்டும் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி, இன்று மக்கள் சாதாரணமாக வெளியே வர தொடங்கி உள்ளனர். இதன்காரணமாக மேலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் 75 நகரங்களை தனிமைப்படுத்தப்பட்ட நகரங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி சென்னை காஞ்சிபுரம் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை தனிமைப்படுத்தப்பட்ட மாவட்டமாக அறிவித்து உள்ளது மத்திய அரசு. இந்த ஒரு நிலையில் தனிமைப்படுத்துதல் விதிகளை கட்டாயமாக பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், நகரங்களை தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் அதனை பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருக்கின்றனர். கொரோனா வைரஸ் தீவிரத்தை மக்கள் உடனடியாக புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட நகரங்களில் விதிகளும் சட்டங்களும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பதனை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.