Parenting Tips : உங்கள் குழந்தை எதுக்கெடுத்தாலும் அழுதா? அப்போ இப்படி டேக் கேர் பண்ணுங்க!

Parenting Tips in Tamil : அதிக உணர்திறன் கொண்ட குழந்தையை சரியாக பராமரிப்பது எப்படி என்று இப்போது இங்கு பார்க்கலாம்.

parenting tips how to take care highly sensitive child in tamil mks

பொதுவாகவே, பெரும்பாலான குழந்தைகள் அதிக உணர்திறன் கொண்டவர்கள். பொதுவாக குழந்தைகள் சின்ன சின்ன விஷயங்கள் அழுவது இயற்கையானது. ஆனால், உங்கள் குழந்தை எதற்கு எடுத்தாலும் அழுகிறதா? உங்கள் குழந்தை ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் அழுவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அப்படியானால், அவர்கள் ரொம்பவே உணர்திறன் உடையவர் என்று அர்த்தம். இப்படிப்பட்ட குழந்தையை வளர்ப்பது நிறைய பொறுமை மற்றும் புரிதல் மிகவும் அவசியம். இத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு உதவக்கூடிய சில குறிப்புகள் இங்கே உள்ளன.

அதிக உணர்திறன் கொண்ட குழந்தையை பராமரிப்பது  எப்படி?

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது: அதிக உணர்திறன் கொண்ட குழந்தை மிகவும் உணர் திறன் வாய்ந்த நரம்பு மண்டலத்துடன் பிறக்கிறது. இத்தகைய குழந்தை எல்லாவற்றிற்கும் உடனே பதில் அளிக்கும் மற்றும் எல்லாவற்றையும் மிகவும் ஆழமாக சிந்திக்கும்.

மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள்: யாராவது கஷ்டத்தில் இருக்கும்போது அவர்களைப் பார்த்து இவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். மேலும் இத்தகைய குழந்தைகள், மிகவும் அமைதியானவர்கள் உள்முக சிந்தனை உடையவர்கள் மற்றும் வளர்ப்பதற்கு மிகவும் எளிதானது அல்லது அவர்கள் பிடிவாதமாகவும் இருக்கலாம்.

தனியாக விடுங்கள்: அதிக உணர்ன் கொண்ட குழந்தையை கையாளுவதில் நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், அவர்களது உணர்வுகளை புரிந்துகொண்டு ஏற்றுக் கொள்ளுங்கள். மேலும், அவர்களை தங்களை தாங்களே சமாதானம் படுத்த சிறிது நேரம் அவர்களை தனியாக விட்டு விடுவது நல்லது.

இதையும் படிங்க:  மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவுகளை கண்டிப்பா  கொடுங்க.. நோய்யெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!

செல்லப் பிராணிகளை வாங்கி கொடுங்கள்: அதிக உணர்திறன் கொண்ட குழந்தைகள் செல்லப்பிராணிகள் வளர்க்க விரும்புகிறார்கள். எனவே, செல்ல பிராணிகளை அவர்களுக்கு வாங்கி கொடுங்கள். அது குழந்தையின் மனநிலையை  அமைதிப்படுத்தும்.

இப்படி நடந்து கொள்ளாதே! குழந்தையை அடிப்பது, குழந்தையிடம் கத்துவது போன்ற கடுமையான தண்டனையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இது அவர்களின் மனநிலையை ரொம்பவே மோசமாக்கும்.

இதையும் படிங்க: ஸ்கூலுக்கு டைம் ஆச்சு.. ஆனா இன்னும் உங்க குழந்தை  தூங்கிட்டு இருக்கா? அப்ப இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க

முதலில் பேசுங்கள்: உங்கள் குழந்தை அழுவதை நீங்கள் கண்டால் அவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள். மேலும், அவர்களால் பதில் அளிக்கக்கூடிய கேள்விகளை கேளுங்கள். முக்கியமாக, அவர்களுக்கு ஒரு சிறிய நம்பிக்கையை கொடுங்கள்.

மாற்ற முயற்சிக்காதே! உங்கள் குழந்தை உணர்திறன் கொண்டவராக இருந்தால், அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். மாற்ற முயற்சிக்காதீர்கள். ஏனெனில், நீங்கள் எவ்வளவு அதிகமாக அவர்களை மாற்ற முயற்சித்தாலும், அது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும்.

ஒரு அன்பான அணைப்பு: அவர்கள் ஏதாவது விஷயத்தில் கவலையாக இருந்தால் அவர்களை கட்டிப்பிடித்து, உங்களது அன்பை வெளிப்படுத்துங்கள். இது அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வு மற்றும் நம்பிக்கை அளிக்கிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios