ஸ்கூலுக்கு டைம் ஆச்சு.. ஆனா இன்னும் உங்க குழந்தை தூங்கிட்டு இருக்கா? அப்ப இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க
உங்கள் குழந்தைக்கு போதுமான தூக்கம் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் காலையில் எழுவது மிகவும் கடினமாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தினமும் காலை குழந்தைகளை எழுப்பி, அவர்களை தயார்ப்படுத்தி ஸ்கூலுக்கு அனுப்புவது ஒவ்வொரு பெற்றோருக்கும்பெரும் சவாலாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக, சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சோம்பேறி ஆகிவிட்டதாகவும், அதிகாலையில் எழுதிருக்க விரும்புவதில்லை என்றும் புகார்கள் அளிக்கின்றனர். இதனால் குழந்தை பள்ளிக்கு எப்போதும் தாமதமாக செல்லுவதாகவும் கூறுகின்றனர்.
இன்னும் சில பெற்றோர்களோ தங்கள் குழந்தைகளை காலையில் எழுப்புவதில் கடுமையாக நடந்து கொள்கிறார்கள், சில சமயங்களில் அவர்களை அடிக்க கூட செய்கிறார்கள். ஆனால், இப்படி செய்வதன் மூலம் பிரச்சனையை தீர்க்க முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆனால், உண்மையில் ஒவ்வொரு வயது குழந்தைக்கு தூக்கத்தை இருந்து முழிக்க வெவ்வேறு நேரம் உள்ளது தெரியுமா? உதாரணமாக, மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் 12 முதல் 15 மணி நேரமும், 5 முதல் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 9 மணி முதல் 12 மணி வரையும் கண்டிப்பாக தூங்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், உங்கள் குழந்தைக்கு போதுமான தூக்கம் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் காலையில் எழுவது மிகவும் கடினமாக இருக்கும். ஆகவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் பிள்ளைக்கு அதிகாலையில் எழும் பழக்கத்தை எப்படி ஏற்படுத்தலாம் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: Parenting Tips : ஒரு குழந்தையின் பெற்றோருக்கான பெஸ்ட் அட்வைஸ்..!
குழந்தைகளை அதிகாலையில் எழுப்புவதற்கான சிறந்த வழிகள்:
1. அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள்:
உங்கள் பிள்ளை அதிகாலையில் எழுந்திருக்க முடியவில்லை என்றால் முதலில் அவர்கள் ஏன் எழுந்திருக்க சிரமப்படுகிறார்கள் என்பதை கண்டறியுங்கள். உங்கள் குழந்தை இரவில் நன்றாக தூங்கவில்லையா? அல்லது அவர்களுக்கு ஆழ்ந்த உறக்கம் வரவில்லையா? இப்படி ஏதாவது நடந்தால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.
2. நேரத்தை நிர்ணயிக்கவும்:
ஸ்கூலுக்கு போகும் குழந்தைகள் குறைந்தது 10 மணி நேரமாவது கண்டிப்பாக தூங்க வேண்டும். ஆகையால், குழந்தைகளை இரவில் மொபைல் போன் போன்றவற்றிலிருந்து விலக்கி வையுங்கள். முக்கியமாக, குழந்தைகள் படுக்கைக்கு செல்வதற்கு என ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு குழந்தை நல்ல தூங்கத்தைப் பெற முடியும்.
3. அன்பாக வளர்க்கவும்:
நீங்கள் உங்கள் பிள்ளையை வளர்க்கும் போது அன்பான வார்த்தைகளை பயன்படுத்தி வளர்க்கவும். மேலும் உங்கள் குழந்தையை காலையில் எழுப்பும்போது குழந்தையின் பெயரை அன்புடன் கூப்பிட்டு, காலை வணக்கம் சொல்லுங்கள். குழந்தையிடம் இனிமையாக பேசி எழுப்புங்கள்.
இதையும் படிங்க: Parenting Tips : உங்க குழந்தை ஸ்கூல் விட்டு வந்தவுடன் முதல்ல 'இந்த' கேள்விகளைக் கேளுங்கள்..!
4. பாடல்களை போட்டு எழுப்புங்கள்:
உங்கள் குழந்தையை எழுப்ப அவருக்கு பிடித்த பாடலை போட்டு எழுப்புங்கள். இது ஒரு நல்ல சூழ்நிலை உருவாகும் மற்றும் குழந்தையும் மகிழ்ச்சியுடன் தூக்கத்திலிருந்து எழும்.
5. வாசனையான உணவை செய்யுங்கள்:
நீங்கள் உங்கள் பிள்ளையின் காலை உணவுக்காக சில ஆரோக்கியம் நிறைந்த வாசனையுள்ள உணவை செய்யுங்கள். இந்த வாசனைகள் உங்கள் குழந்தை தானாகவே எழுந்திருக்கும். மேலும் இப்படி செய்தால் உங்கள் குழந்தை விரைவாக தயாராகி, தானாகவே காலை உணவை விரும்பி சாப்பிடுவார்கள்.
6. பிஸியாக வையுங்கள்:
உங்கள் குழந்தை எழுந்தவுடன், வேலை எதுவும் செய்யாமல் சும்மா இருந்தால் மீண்டும் தூங்கிவிடும். எனவே, நீங்கள் உங்கள் குழந்தையை எழுப்பிய உடனே செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், நோட்டு புக்கை ஸ்கூல் பேக்கில் வைப்பது போன்ற வேலைகளில் உங்கள் குழந்தையை மும்முரமாக்குங்கள். இப்படி செய்தால் உங்கள் குழந்தை ஒரேடியாக தூக்கத்திலிருந்து எழுந்து ஸ்கூலுக்கு செல்ல உடனே தயாராகி விடுவார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D