நீங்கள் உங்கள் குழந்தையிடம் இரவு சாப்பிடும் நேரத்தில் கேட்க வேண்டிய கேள்விகள் என்னென்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்..

சில பெற்றோர்கள் குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும், பள்ளியில் என்ன நடந்தது..? நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது போன்ற கேள்விகளைக் கேட்பார்கள். ஆனால் அப்படி கேட்பது தவறு. அப்படியானால் எப்போது தான் கேட் வேண்டும் என்று யோசிக்கலாம். எனவே, நீங்கள் உங்கள் குழந்தையிடம் அப்படிப்பட்ட கேள்விகளை கேட்க சரியா நேரம் எதுவென்றால் அது இரவு உணவு சாப்பிடும் நேரமாகும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அம், ஏனென்றால், அந்த நேரத்தில் தான் குடும்பம் அனைவரும் ஒன்றாக கூடி சாப்பிடுவார்கள். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கேள்விகளை கேட்கலாம். இப்போது இந்த சமயத்தில் என்ன மாதிரியான கேள்விகளைக் கேட்கலாம் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  Parenting Tips : பெற்றோர்களே.. காலையில் குழந்தைகளிடம் 'இந்த' விஷயங்களை சொல்ல மறக்காதீங்க!!

இரவு சாப்பிடும் நேரத்தில் பெற்றோர்கள் குழந்தைகளிடம் கேட்க வேண்டிய கேள்விகள்: 

  • முதலில், குழந்தைகளின் இன்றைய நாள் எப்படி இருந்தது என்று அன்புடன் கேட்க வேண்டும். இப்படி கேட்டால் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். மேலும் அவர்கள் தங்கள் மனதில் உள்ளவற்றை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அதிகம்.
  • நாளின் உங்களுக்கு பிடித்த நல்ல பகுதி எது என்றும் கேட்கலாம். இது குழந்தைகளின் நேர்மறையான அம்சத்தை வெளிப்படுத்துகிறது. சிறிய விஷயங்களுக்கு கூட எப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். மகிழ்ச்சியைப் பகிர்வது அதிக மகிழ்ச்சியை உருவாக்கும்.
  • இன்று யாராவது உங்களை ஆச்சரியப்படுத்தினார்களா போன்ற கேள்விகளையும் நீங்கள் கேட்க வேண்டும். இதுபோன்ற கேள்விகளும் பதில்களும்.. குழந்தைகளின் ஆர்வத்தையும் விமர்சன சிந்தனையையும் அதிகரிக்க காரணமாகிறது.
  • நாளை என்ன செய்ய விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியும் கேட்க வேண்டும். குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகுதான் எதிர்காலத் திட்டங்கள் என்று நினைக்காதீர்கள். சிறு வயதிலிருந்தே குழந்தைகளிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேட்பதன் மூலம், அவர்கள் தொலைநோக்குப் பழக்கத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். இன்று நாளை பற்றி சிந்திப்பது அவசியம்.

இதையும் படிங்க: Parenting Tips : மகளை பெற்ற ஒவ்வொரு தந்தைக்கான பதிவு இது..! கண்டிப்பாக படிங்க..!

  • இன்று புதிதாக ஏதாவது கற்றுக்கொண்டீர்களா? என்று கேளுங்கள். ஒவ்வொரு நாளும் இந்த கேள்வியை நீங்களே கேட்க மறக்காதீர்கள். இதனால், அவர்கள் உங்களுக்கு பதில் சொல்ல புதிய விஷயங்களில் கவனம் செலுத்த முடியும். அவர்களுக்குத் தெரியாமல்..புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துகிறார்கள்.
  • இன்று யாருக்காவது உதவி செய்தீர்களா? என்றும் கேட்க மறக்காதீர்கள். ஏனெனில், தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நற்பண்பை குழந்தைகளிடம் ஏற்படுத்த இந்தக் கேள்வி உதவுகிறது.
  • இன்று ஏதாவது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்ததா? நீங்கள் சந்தோஷமாக இருந்தீர்களா..? என இது போன்ற கேள்விகளையும் கேளுங்கள். இவற்றுக்குப் பதிலளிக்கும் போது மீண்டும் ஒருமுறை அவர்கள் முகத்தில் ஒரு புன்னகையைக் காணலாம். இந்தக் கேள்வியின் மூலம் அவர்களின் மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
  • குழந்தைகள் கொஞ்சம் பெரியவர்களாக இருந்தால்... உங்கள் மனதில் ஏதாவது இருக்கிறதா? நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமா? இதே போன்ற கேள்விகள் கேட்கப்படலாம். சில குழந்தைகள் பயத்தினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ தாங்கள் கேட்க விரும்புவதைக் கேட்பதைக் கூட நிறுத்திவிடுவார்கள். எனவே, இப்படி கேட்பது அவர்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D