பெண் குழந்தையை பெற்றேடுத்த ஒரு தந்தை என்னென்ன விஷயங்களை மனதில் வைக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

முந்தைய காலத்தில் பெரும்பாலும், குழந்தைகளை வளர்க்கும் சுமை தாய்மார்கள் மீது தான் அதிகம் சுமத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண் பிள்ளையை வளர்ப்பது என்றால் சொல்லவே வேண்டாம். தாய்மார்கள் அவர்களை ரொம்பவே கண்ணும் கருத்துமாக வளர்ப்பார்கள்.

ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. மகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தந்தையின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது. தந்தையின் நடத்தை பெண்களின் ஆளுமையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும், தனது மகளை சிறந்த மற்றும் வெற்றிகரமான நபராக மாற்றுவதில் ஒரு தந்தை எவ்வாறு சிறப்புப் பங்கு வகிக்க முடியும் என்பதையும் குறித்து இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இப்படி இருக்க ஒரு தந்தை என்னென்ன விஷயங்களை மனதில் வைக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தாயுடன் சிறந்த நடத்தை: எந்தவொரு பெண்ணின் முதல் காதல் எதுவென்றால் அது அவளது தந்தை தான். பெண்கள் தங்கள் தந்தையை உலகின் சிறந்த மனிதராக பார்க்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மனைவியுடன் நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில், தந்தைக்கும் தாய்க்கும் இடையிலான உறவு அவரது திருமண வாழ்க்கையையும் பெரிதும் பாதிக்கிறது. எனவே, உங்கள் மகள்கள் முன் உங்கள் மனைவியை மரியாதையுடனும் அன்புடனும் நடத்துவது நல்லது.

அவள் வார்த்தைகளை கேளுங்கள்: ஒவ்வொரு தந்தையும் தனது மகளின் பாதுகாப்பை முதன்மையாகக் கருதுகிறார்கள். குழந்தை பருவத்தில், மகள்கள் எல்லாவற்றையும் மிக எளிதாக பகிர்ந்து கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் வளர வளர, அவர்கள் எல்லாவற்றையும் சொல்லத் தயங்குகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்கு எல்லாவற்றையும் பற்றிய அறிவையோ வழங்குவதற்கு பதிலாக, எல்லாவற்றையும் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவது முக்கியம். அவர்கள் சொல்வதைக் கேட்டு, அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டால், சிறந்த முறையில் அவர்களுக்கு உதவ முடியும்.

ஆதரவாக இருங்கள்: குழந்தைகளின் பிரச்சனை என்னவென்றால், அவர்களின் பெற்றோர்கள் அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் தவறுகளைக் கண்டுபிடிப்பார்கள். ஆனால் நீங்கள் ஒரு சிறந்த தந்தையாக இருக்க விரும்பினால், உங்கள் மகள்களையும் பாராட்டுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும், அவளுடைய தந்தையிடமிருந்து பெறப்பட்ட நேர்மறையான கருத்து மிகவும் முக்கியமானது. மேலும் அது முன்னேற தைரியத்தையும் அளிக்கிறது. 

மகள்களின் பொழுதுபோக்குகளில் ஆர்வம் காட்டுங்கள்: உங்கள் நடத்தையின் மூலம், உங்கள் மகள்களின் பொழுதுபோக்குகளில் நீங்களும் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை உணர வைக்க வேண்டும். உதாரணமாக, பள்ளி எப்படி இருந்தது என்று கேட்பதற்குப் பதிலாக, வகுப்பில் ஏதாவது சுவாரஸ்யமாக நடந்ததா? இல்லையா? என்று கேட்கலாம். அவளருக்கு இசை பிடித்திருந்தால் அதில் அவளுடன் சேர்ந்து கேளுங்கள்.

ஆதரவு: மகள்களுக்கு தந்தையின் ஆதரவு மிகவும் முக்கியமானது. நீங்கள் அவர்களை எல்லா வகையிலும் ஆதரித்து முன்னேறத் தூண்டினால், அது அவர்களை வாழ்க்கையில் முன்னேற மனதளவில் தயார்படுத்துகிறது மற்றும் எல்லா வகையான பிரச்சனைகளையும் சமாளிக்க அவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள்.

சிறப்பு உணர்வை ஏற்படுத்துங்கள்: காலம் வேகமாக கடந்து செல்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள், இன்று குழந்தைகளாக இருக்கும் மகள்கள் வளர்ந்து நாளை தங்கள் சொந்தக் காலில் நிற்பார்கள். எனவே உங்கள் அன்பை உங்கள் மனதுக்கு நிறைவாகப் பொழியுங்கள். அவளுடைய பிறந்தநாளில் கையால் எழுதப்பட்ட கார்டுகளை பரிசாக கொடுங்கள். அவளுக்குப் பிடித்தமான பரிசுகளை ஒன்றாக வாங்கி, தரமான நேரத்தைச் செலவழித்து, விளையாடுங்கள். நீங்கள் அவளை ரொம்பவே நேசிக்கிறேன் என்று சொல்லுங்கள். இந்த நினைவுகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கிடையேயான பிணைப்பை வலுவாக வைத்திருக்கும் மற்றும் கடினமான காலங்களில் தைரியத்தை அளிக்கும்.