அதிர்ஷ்டசாலி OPS-EPS..! வரலாற்றில் இடம் பிடிக்கும் சுவாரசிய தகவல்..! 

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் தமிழ்நாட்டில் இருக்கும் மாமல்லபுரத்தில் இன்று மாலை மற்றும் நாளை காலை சந்தித்து பேச இருக்கின்றனர். இதற்காக இன்று காலை பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். அவருக்கு தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கோவளம் சென்றடைந்த பிரதமர் அங்கு ஓய்வெடுத்து வருகிறார்.

பிற்பகல் 1.30 மணியளவில் தனி விமானம் மூலம் சீன அதிபர் சென்னை வந்ததடைந்தார். அவரை எடப்பாடி பழனிச்சாமி, ஒ பன்னீர் செல்வம், ஆளுநர் விமான நிலையம் சென்று பூங்கொத்து கொடுத்து, தமிழக அரசு சார்பில் ஆடல் பாடல் என பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். 

குறிப்பாக பாரம்பரியமான பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், இசை வாத்தியங்கள் முழுங்க  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் கிண்டியில் இருக்கும் ஐடிசி ஹோட்டலில் ஓய்வெடுக்க சென்றுள்ளார். மாலை பிரதமர் மோடி அவரை வரவேற்க இருக்கிறார்.
 
இப்படி ஒரு அற்புதமான தருணத்தில் உற்று நோக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், வரலாற்றில் இடம்  பிடிக்கும் விதமாக வேறு எந்த  மாநில முதல்வருக்கும் கிடைக்காத ஓர் அற்புதமான வாய்ப்பாக சீன அதிபரை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்று உள்ளது. அவ்வளவு ஏன்? தமிழக முதல்வராக இருந்த மறைந்த எம் ஜி ஆர்,ஜெயலலிதா,கருணாநிதி உள்ளிட்ட எந்த ஒரு முதல்வருக்கும் கிடைக்காத  ஓர் அற்புத நிகழ்வு எடப்பாடி ஆட்சியின் போது நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இப்படி ஒரு வரலாற்று சிறப்பு நிகழ்வை எத்தனை வருடங்கள் கழித்து பேசினாலும், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி என நினைவு கூறும் வகையில் அமைந்துவிட்டது மாமல்லபுரத்தில் நடக்கும் பிரதமர் மற்றும் சீன அதிபரின் சந்திப்பு...