உயரத்தை அதிகரிக்க கூடவா , அறுவை சிகிச்சை...!!! – ஊசலாடும் உயிர் !!!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில், நிகில் ரெட்டி என்பவர் தனது உயரத்தை இரண்டு அங்குலம் அதிகரிக்க வேண்டும் என கூறி , அதற்கான அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனையடுத்து சில நாட்கள் செல்ல செல்ல, தாங்க முடியாத வலியில் துடித்துள்ளார். தற்போது அவரால், எழுந்து கூட நடக்க முடியாத அளவுக்கு , வலியாலும் மற்ற பிரச்சனையாலும் அவதி பட்டு வருகிறார்.

 இது தொடர்பாக, தெலங்கானா மாநில மெடிக்கல் கவுன்சில் மேற்கொண்ட விசாரணையில், நிகில் ரெட்டியின் இந்த நிலைக்கு மருத்துவமனையும், தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவரும்தான் காரணம் என்பதை உறுதி செய்தது.

மேலும் நிகில் உடல் நிலை சரியாகும் வரை, அவரின் முழு சிகிச்சை செலவையும் குளோபல் மருத்துவமனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உயரத்தை அதிகரிக்க செய்த இந்த அறுவை சிகிச்சை , அனைவரையும் திடுக்கிட செய்துள்ளது.