Asianet News TamilAsianet News Tamil

பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... 100 ரூபாய் நோட்டு இனி செல்லாதா? ரிசர்வ் வங்கி கூறுவது என்ன?

பழைய 100 ரூபாய் நோட்டுக்களை மார்ச் அல்லது ஏப்ரல் மாத இறுதிக்குள், முழுமையாக விலக்கிக் கொள்ள உள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

Old Rs 100 notes to go out of circulation by March? Reserve Bank
Author
Bangalore, First Published Jan 23, 2021, 6:55 PM IST

பழைய 100 ரூபாய் நோட்டுக்களை மார்ச் அல்லது ஏப்ரல் மாத இறுதிக்குள், முழுமையாக விலக்கிக் கொள்ள உள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

மங்களூருவில் மாவட்ட வங்கி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்புக் குழு மற்றும் மாவட்ட அளவிலான நாணய மேலாண்மைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர் மகேஷ் பேசும் போது;- மார்ச்-ஏப்ரல் மாதத்திற்குள் ரிசர்வ் வங்கி பழைய 100, 10 மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதால், அவை புழக்கத்தில் இருக்காது என்று கூறினார்.

Old Rs 100 notes to go out of circulation by March? Reserve Bank

 மேலும் பேசுகையில், 10 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகும், வர்த்தகர்களும் வியாபாரிகளும் அந்த நாணயங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள், இது மற்ற வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் பெரும்பாலான வங்கிகளில் 10 ரூபாய் நாணயங்கள் குவிந்துள்ளன.

Old Rs 100 notes to go out of circulation by March? Reserve Bank

10 ரூபாய் நாணயம் செல்லாது என கூறப்படுவது ஒரு வதந்தி என்பதை வங்கிகள் மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்றும் ரூ .10 நாணயத்தை பொதுமக்கள் மத்தியில் மீண்டும் கொண்டுவருவதற்கான வழிகளை வங்கிகள் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் மகேஷ் கூறினார். பண மதிப்பிழப்புக்கு பிறகு 2019ம் ஆண்டு புதியவகை 100 ரூபாய் நோட்டு புது வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ரூபாய்தான் தற்போது உலா வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios