நோக்கியா போன் வெடித்து மாணவி பலி...! பேசும் போதே வெடித்த அதிர்ச்சி சம்பவம்..! 

அப்பாடா...ஊர் நாட்டுல எந்த போன் வெடித்தாலும்,நோக்கியா நோக்கியா தான்டா என  பலரும் பெருமை பட  பேசினதை கண் எதிரே பார்த்து இருப்போம் அல்லவா..

 தற்போது இதற்கு கண்ணு படும் விதமாக அமைந்துள்ளது இந்த சம்பவம் ....

 ஓடிசா  மாணவி

ஒடிசா அருகே இருக்கும் கெய்ராகனி என்ற பகுதியில்,நோக்கியா போனில்  பேசிக்கொண்டிருந்த மாணவி  திடீரென போன் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்துள்ளார்

 சூடு தாங்காத  போன் திடீரென  வெடித்துள்ளது.....அப்போது  அந்த  மாணவி(18 ) போன் பேசிக்கொண்டு இருந்துள்ளார் ..ஆனால் செல்போன் சார்ஜ் போட்டவாறே ஒருவேளை  பேசி இருப்பாரோ என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது....

இது குறித்து நோக்கியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்ட போது.." இது ஒரு துக்கமான  செய்தி... அந்த நோக்கியா போனின் மாடல் நோக்கியா 5233 என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எங்கே தவறு நடந்தது என்று விசாரிக்கப்படும். இதில் கண்டிப்பாக எங்களுடைய தவறு எதுவும் இருக்காது என்று நம்புகிறோம்''  என்று தெரிவித்து உள்ளனர்.

மேலும்  இது தொடர்பாக உயிரிழந்த  மாணவியின் பெற்றோர் நோக்கியா நிறுவனம் மீது வழக்கு தொடர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.