இன்னும் ஒரு வாரத்திற்கு மழை இப்படித்தான்..! சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன..? 

வடகிழக்கு பருவ மழை முடிய உள்ளதால் மழையின் அளவு மெல்ல மெல்ல குறைந்து, அடுத்து  வரும் சில நாட்களுக்கு மழையை எதிர்பார்க்க முடியாது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2 வார காலமாகவே வட கிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு அணைகள் நிரம்பியது. விவசாய பெருமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை நிறைவடையும் தருவாயில் இருப்பதால் அடுத்து வரும் சில நாட்களுக்கு மழை இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது 

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை இல்லை என்றாலும், தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

சென்னையை பொறுத்த வரையில் கடந்த ஒரு சில நாட்களாக இருந்தது போல, அவ்வப்போது  வானம் மேக மூட்டஇத் துடன் காணப்படும் என்றும், சில சமயத்தில் லேசான தூரல் இருக்கும் எனவும் அதெரிவிக்கப்பட்டு உள்ளது.