ஜனநாயக நாட்டில் "யாரும் யாரையும் பழி வாங்க முடியாது"...! தெறிக்கவிடும் அமைச்சர் ஜெயக்குமார்..! 

இரண்டாவது நாளாக நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வரும் நிலையில், இது குறித்து அமைச்சர் ஜெயகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆளும் கட்சியை விமர்சிக்கும் முறையில் படம் எடுத்ததால் பழி வாங்கும் செயல் தான் வருமானவரித்துறை ரரெய்டா என கேட்கப்பட்ட போது, ஜனநாயக நாட்டில் யாரும் யாரையும் பழி வாங்க முடியாது.. அவரவர் வேலையை அவரவர் செய்கின்றனர் என தெரிவித்து  உள்ளார். 
 


"பிகில்" பட விவகாரம் தொடர்பாக ஏஜிஎஸ் சினிமாஸுக்கு சொந்தமான 20 இடங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு  வருகின்றனர். அப்போது தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஃபைல் ஒன்று சிக்கியதாகவும், அதில் பிகில் படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு கொடுக்கப்பட்ட சம்பளத் தொகை, படத்தின் வரவு செலவு, வசூல் விவரங்கள் இடம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து மாஸ்டர் பட ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த நெய்வேலிக்கு புறப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்யிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் விஜய் சொன்ன தகவலும், ஏஜிஎஸ் ஃபைலில் இருந்த தகவலும் இடித்துள்ளது. அதனால் தான் விஜய்யை கையோடு வாங்க போலாம் என அவர் காரில் வைத்தே சென்னை அழைத்து வந்துள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.

நேற்று இரவு 8.45 மணி அளவில் சென்னை பனையூரில் உள்ள வீட்டிற்கு விஜய்யை அழைத்து வந்த போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சாலிகிராமம், நீலாங்கரை, பனையூரில் உள்ள விஜய்யின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 8 ஐ.டி. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், விஜய் வீட்டிற்கு முன்பு துப்பாக்கி ஏந்தி 7 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் நேற்று நிறுத்தப்பட்ட மாஸ்டர் படப்பிடிப்பை இன்று தொடரலாம் என படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் இன்றும் விஜய் வீட்டில் சோதனை தொடர்வதால் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிகில் பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜயிடம் கிடுக்குபிடி விசாரணை தொடரும் இதே நேரத்தில், இயக்குநர் அட்லியிடமும் விசாரணை நடைபெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இப்படி ஒரு  நிலையால் தான், மெர்சல் மற்றும் பிகில் படத்தில் வெளியான அரசியல் சார்ந்த  விமர்சனங்களை வைத்து தான் இந்த ரெய்டு குறி வைத்து நடத்தப்பட்டு உள்ளது என கருத்து  வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த ஒரு  தருணத்தில் இது குறித்து அமைச்சர் ஜெயகுமாரிடம் கருத்து கேட்கப்பட்ட போது அவருக்கே உண்டான பணியில் பதில் அளித்து தெறிக்கவிட்டு உள்ளார்.