இனி விவசாயத்திற்கான நகை கடன் கிடையாது..! 4% வட்டியெல்லாம் போயே போச்சு..! பெரும் சோகத்தில் விவசாய பெருமக்கள்..! 

விவசாயத்திற்கு 4% வட்டியில் வழங்கப்பட்டு வந்த நகைக்கடன் இனிவரும் காலங்களில்  வழங்கப்படமாட்டாது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

மத்திய அரசின் மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் விவசாயத்திற்கான நகைக்கடன் இனி வழங்கப்படாது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கும் பல்வேறு குடும்பங்கள் தங்களுடைய விவசாய நிலங்களை காட்டி வங்கிகளில் கடன் பெற்று வந்தனர். ஆத்திரம் அவசரத்திற்கு தங்களிடம் உள்ள நகைகளை வைத்து விவசாய கடனாக 4 சதவீத வட்டிக்கு பெற்று வந்தனர்.

மிக குறைந்த வட்டி என்பதால் வேறு சில காரணங்களுக்காகவும் கூட நகைகளை வைத்து விவசாய கடன்  பெறுவதும் இருந்தது. இருந்தபோதிலும் கிராமப்புற மக்கள் அவர்களது தேவைக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது என்றால் வங்கிகள் வழங்கி வந்த நகைகள் மீதான விவசாய கடன் திட்டம் என கூறலாம். நான்கு சதவீதம் என்பது மற்றவற்றிற்கு வழங்கப்படும் வட்டியை விட மிக மிக குறைந்தது என்பதால் இதுநாள் வரை விவசாய பெருமக்களுக்கு பேருதவியாக இருந்து வந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு இதுநாள் வரை வழங்கி வந்த மானியத்தை ரத்து செய்ய உள்ளதால் இனி நகைகள் மீதான விவசாயக்கடன் கிடையாது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது விவசாய பெருமக்களே என கடும் கொந்தளிப்பில் உள்ளனர் பொதுமக்கள். இந்த தகவல் தற்போது அனைவரிடத்திலும்பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.