கிடைத்தது "நித்யானந்தாவின் சிறுவயது புகைப்படம்"! அலசி ஆராய்ந்து கமெண்ட்ஸ் பண்ணும் நெட்டிசன்கள்..!

இளைஞர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றுள்ள நித்தியானந்தா தற்போது எங்கு உள்ளார் என்ற செய்தி யாருக்குமே தெரியாது. ஆனால் தினந்தோறும் சமூகவலைத்தளங்களில் நேரலை கொடுத்து அவருடைய பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.

அதிலும் குறிப்பாக இவருடைய பேச்சு என்றாலே... அதனை கவனிப்பதற்காக ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றே சொல்லலாம். பொதுவாகவே சினிமா நடிகர் நடிகைகளுக்கும், விளையாட்டு பிரபலங்களுக்கும், ஒரு சில பிரபல அரசியல் தலைவர்களுக்குமே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும். ஆனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் தனக்கென ஒரு நீங்கா இடம் பிடித்து இருப்பவர் தான் நித்தியானந்தா. காரணம்... அவருடைய கருத்தான பேச்சு, சில சமயத்தில் நடுநடுவே நகைச்சுவை கலந்த நக்கல் பேச்சு... இவருடைய பேச்சை கேட்பவர்கள் தோல்வியில் இருந்தாலும் மனம் தளராமல் மீண்டு வந்து விடுவார்கள். அந்த அளவுக்கு அவருடைய பேச்சு இருக்கும்.

இன்னும் சொல்லப்போனால் இன்றைய இளைஞர்கள் வேலைப்பளு, நடைமுறை வாழ்க்கையில் உள்ள சிக்கல், சிறிது நேரம் கூட ஓய்வு எடுக்க முடியாமல் பம்பரமாய் சுழன்று கொண்டிருப்பவர்கள் எல்லாம் கொஞ்சம் நேரமாவது மனம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் நித்தியானந்தாவின் பேச்சை கேட்க ஆவலாக மொபைல் போனை ஆன் செய்கின்றனர்.

உதாரணத்திற்கு மிகவும் பிரபலமான வசனங்கள்

"எனக்கு வச்சான் பாரு ஆப்பு" என்ற வசனமும்.... "நோ சூடு நோ சொரணை" என்ற வசனமும் இன்றளவும் தீயாய் பரவி வருகிறது என்றால், அதற்கு காரணம் நித்தி மட்டுமே... இப்படிப்பட்ட நித்தி எங்கு இருக்கிறார்? என ஒருபக்கம் தேடுதல் வேட்டை இருந்தாலும் மற்றொரு பக்கம் நித்தி எங்கிருந்தாலும் பரவாயில்லை... அவரை தினமும் தரிசனம் செய்தாலே போதும் என ஒரு கூட்டம் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது.

இதுதான் என் "முதல் காதல்"..! கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் "ட்வீட்"..!

இப்படி ஒரு நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நித்தியானந்தாவின் சிறுவயது போட்டோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் இது குறித்த கருத்துக்களை அவரவருக்கு உண்டான பாணியில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த புகைப்படம் உங்களுக்காக இதோ..