இதுதான் என் முதல் காதல்..! கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் "ட்வீட்"..! 

காதலர் தினமான இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் ஒரு வீடியோவை பதிவிட்டு இதுதான் என் முதல் காதல் என தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் சச்சின் டெண்டுல்கருக்கு இன்றளவும் மாபெரும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கிரிக்கெட் என்றாலே அது சச்சின் தான் என்ற புரிதல் இருக்கும். அந்த அளவிற்கு சச்சின் மீது தீராத அன்பு அவருடைய பேட்டிங் ஸ்டைலுக்கு அனைவரும் அடிமை என்றே சொல்லலாம்.

இந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் சமூகவலைதளங்களில் தன்னுடைய முதல் காதல் பற்றி புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர் தங்கள் காதலியுடன் உள்ள புகைப்படங்களையும், ஒரு சிலர் தங்களது கணவருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பதிவிட்டு என் முதல் காதல் இது என குறிப்பிட்டு உள்ளார்.

இதேபோன்று சில வருடங்களுக்கு முன் சச்சினின் மனைவி அஞ்சலி அளித்த பேட்டியிலும் அவருக்கு முதல் காதல் கிரிக்கெட் தான். அதன் பின்புதான் நான் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அளவிற்கு கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட சச்சின் காதலர் தினமான இன்று அவருடைய  முதல் காதல் பற்றி ட்விட்டரில் பதிவு செய்து உள்ளார் இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.