இளமையான சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க நீதா அம்பானி மற்றும் அவரது மகன் ஆனந்த் அம்பானியின் எடை இழப்புக்கு உதவிய பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளர் கூறிய 3 முக்கிய உணவுப் பழக்கங்களை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நீதா அம்பானி 18 கிலோ எடை குறையவும் மற்றும் அவரது மகன் ஆனந்த் அம்பானி 18 மாதங்களில் 108 கிலோ எடை குறைவதற்கு உதவியவர் தான் பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளர் வினோத் சன்னா. இந்தியாவின் மிகச்சிறந்த உடற்பயிற்சி நிபுணர்களில் இவரும் ஒருவர். உடற்பயிற்சி, எடை இழப்பு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கான அணுகு முறையை வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்து கொள்வார்.

அந்த வகையில் சமீபத்தில் தனது வாழ்க்கையை மாற்றிய 3 விஷயங்களை அவர் பதிவிட்டுள்ளார். அதாவது ஆற்றல், சரும ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உயிர் சக்தியை பராமரிப்பதில் ஊட்டச்சத்து மிகவும் முக்கியம் என்று அவர் கூறியுள்ளார். இதை தினமும் பின்பற்றினால் நீண்டகால ஆரோக்கியத்துடனும், என்றும் இளமையாக இருக்க முடியும். இப்போது வயதானதை எதிர்த்து போராடி, சருமத்திற்கு இளமை பொலிவை மீண்டும் பெற உதவும் வினோத் கூறிய அந்த 3 உணவு பழக்கங்களை குறித்து இந்த பார்க்கலாம்.

1. ஆரோக்கியமான உணவுகள் :

நீங்கள் இளமையாக தோன்றவும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும், உங்களது ஒவ்வொரு உணவிலும் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துக்கள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவாசிய கொழுப்புகள் ஆகியவற்றை சரியான அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சன்னா கூறுகிறார்.

அவற்றின் நன்மைகள்;

- செல் பழுது மற்றும் கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கவும், சருமத்தை உறுதியாகவும், இளமையாகவும் வைக்கவும் உதவுகின்றது.

- வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்கவும், நாள் முழுவதும் நீடித்த ஆற்றலை உடலுக்கு வழங்கவும் உறுதி செய்கின்றது.

- நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், வயது தொடர்பான நோய்களி அபாயத்தை குறைக்கவும் அவை உதவுகின்றன.

புரதம் தசை பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே சமயம் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் குடல் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இவை அனைத்தும் வயதான அறிகுறிகளை குறைக்க முக்கிய பங்களிக்கின்றனர் என்கின்றர் நிபுணர்கள்.

2. வயதை துரிதப்படுத்தும் உணவுகளை தவிர்க்கவும் :

குப்பை மற்றும் கலோரிகள் இல்லாத உணவுகள் தான் சீக்கிரமே வயதாவதற்கு உண்மையான காரணம் என்று வினோத் எச்சரிக்கிறார். பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை நிறைந்த மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள் இதில் அங்கும். அவை அனைத்தும் இதற்கு பங்களிக்கின்றன:

- ஆக்சிஜனேற்ற அழுத்தத்தின் காரணமாக சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் தோல் சேதமடையும்.

- இது தவிர வீக்கம் நாள்பட்ட நோய்க்கு வழிவகுக்கும்.

- உடலில் ஆற்றல் குறைவு, சோம்பல், சோர்வு ஆகியவற்றை உணர வைக்கும்.

ஆகவே, 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை பதப்படுத்தப்பட்ட உணவுகள் குறைப்பது நல்லது. இதனால் சருமம் இளமை பொலிவுக்கு உகந்ததாக செயல்படும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர்.

3. கவனத்துடன் சாப்பிடுங்கள் :

நீங்கள் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றியினால் செரிமானம் மேம்படும், வளர்ச்சிதை மாற்றம் சீராக இருக்க உதவும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். அது மட்டுமே கவனத்துடன் சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றுங்கள்.

கவனத்துடன் சாப்பிடும் பழக்கம் ;

- அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்த பகுதி அளவை குறைக்கவும்.

- மன அழுத்தம் தொடர்பான உணவு பசியை குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இது பெரும்பாலும் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.

- கவனத்துடன் சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றினால் செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மேம்படும். இதனால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

நீங்கள் சாப்பிடும் போது எதையும் யோசிக்காமல் சாப்பிட வேண்டும். அதுவும் குறிப்பாக ஆரோக்கியமான உணவுகள் தான். இதனால் ஒட்டுமொத்த ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்தலாம், இளமையான சருமத்தையும் பெற முடியும்.

எனவே இளமை பொலிவு என்பது வெறும் சரும பராமரிப்பு பொருட்கள், கடுமையான உடற்பயிற்சி மட்டுமல்ல, நீங்கள் எந்த மாதிரியான உணவுகளில் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதிலிருந்து தான் தொடங்குகிறது. ஆகவே, நீதா அம்பானியின் இளமை தோற்றத்திற்கு அவரது உடற்பயிற்சி பயிற்சியாளர் வினோத் கூறிய அந்த மூன்று விஷயங்கள் தான் என்று இப்போது நீங்கள் புரிந்திருப்பீர்கள்.