தன்னை பற்றிய செய்தியை "பிரேக்கிங் செய்தியாக" தானே வாசித்த செய்தி வாசிப்பாளர்!  மலையாள தொலைக்காட்சியில் ருசிகரம்! 

பொதுவாகவே எந்த ஒரு பிரேக்கிங் செய்தியாக இருந்தாலும் அதில் ஒரு ஆர்வம் இருக்கும் அல்லவா? இது மக்கள் தரப்பிலிருந்து... ஆனால் தன்னைப் பற்றிய செய்தியை  தானே பிரேக்கிங் செய்தியாக படிக்கக்கூடிய வாய்ப்பு ஒருவருக்குக் கிடைத்துள்ளது என்றால் அது ஸ்ரீஜாவுக்கு மட்டும் தான்.

கிடைத்தது "நித்யனந்தாவின் சிறுவயது புகைப்படம்"! அலசி ஆராய்ந்து கமெண்ட்ஸ் பண்ணும் நெட்டிசன்கள்..!

ஆம்... கேரளாவில் மலையாள தொலைக்காட்சியான மாத்ருபூமி தொலைக்காட்சியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ஸ்ரீஜா ஷியாம் என்பவருக்கு கேரள அரசு "சிறந்த தொகுப்பாளர்' விருது அறிவித்தது. நேற்று காலை இந்த செய்தியை கேரள அரசு அறிவிக்கும் போது ஸ்ரீஜா நேரலையில் இருந்தார். அப்போது இந்த செய்தியும் பிரேக்கிங் செய்தியாக அவரிடம் தெரிவிக்கவே... செய்தியை வெளிப்படுத்தும்போது தன்னை பற்றியது என தெரிந்துகொண்டு இன்ப அதிர்ச்சியில் சற்றும் வெளிப்படுத்தாமல் சிறந்த தொகுப்பாளர் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வண்ணமாக...

"மிகச் சிறந்த தொகுப்பாளர் விருது மாத்ருபூமி தொலைக்காட்சியின் ஸ்ரீஜா" அவர்களுக்கு வழங்கப்படுகிறது என கேரள அரசு அறிவித்துள்ளது" என்று நேரலையில் எடுத்துரைத்தார். இந்த வீடியோ தற்போது அனைவராலும் பேசப்பட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.