மெட்ரோ  ரயிலில்  ஆணுறுப்பு  போன்ற அமைப்பு  கொண்ட  இருக்கையை  அறிமுகம் செய்யப் பட்டுள்ளது .

அதாவது மெக்சிகோ  நகரில்  பொதுவாகவே   மெட்ரோ ரயில்கள்  அதிகம் பயன்படுத்தப் பட்டு வருகிறது.  அதே வேளையில் உலக  அளவில் பெண்கள் மீதான  பாலியல்  வன்கொடுமை  நடந்துக் கொண்டே தான் இருக்கிறது .

அதிலும் குறிப்பாக மெக்சிகோ நகரில் , பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் ,  மக்களிடேயே  ஒரு நல்ல  விழிப்புணர்வை  ஏற்படுத்தும்  வகையிலும் , ,மார்பகங்கள், இடுப்பு,  கை கால்கள்  இவை  அனைத்தும் உள்ளது போன்றஒரு  இருக்கையை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த  இருக்கையில்  யாரும் அமர விரும்ப மாட்டார்கள் . மாறாக அந்த  இருக்கையின்  மூலம்  சொல்ல  வரும் கருத்தை மட்டும்  மனதில் நினைத்துக்கொண்டு  சக  பயணிகள்  பயணம்  செய்கின்றனர்.

 மாற்றம்  தேவைதான் ..அதிலும்  குறிப்பாக  இது போன்ற மாற்றம்  இருந்தால் தான்  மனித  மனம்   திருந்தும் என்றால் , இதையும்  வரவேற்கலாம் .