அடி தூள்..! அடிச்சான் பாரு "இன்விடேஷன்" ..! பத்திரிக்கையில் பெயர் போடலன்னு இனி யாரும் சொல்ல முடியாது..! 

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்து விட்டாலும், கலாச்சார முறையில் மாறுபாடு இருந்தாலும்  இன்றளவும் தம்முடைய பெயர் பத்திரிக்கைகளில் இடம் பெறவில்லை என்றால் "வாய்க்கால் சண்டை" குடும்பத்தில் ஏற்படுவது வழக்கமே....

முன்பு ஒரு காலத்தில் ஒரு வீட்டில் திருமண நிகழ்வு நடைபெற இருக்கிறது என்றால் அழைப்பிதழில் தாய்-தந்தை, சகோதர-சகோதரிகள், மாமன்-மச்சான், பங்காளிகள், சித்தப்பா சித்தி உறவினர்கள் பெயர் என அனைவரின் பெயரும் இடம்பெற வேண்டும். அதிலும் குறிப்பாக ஒரு சித்தப்பா பெயர் போட்டுவிட்டு மற்றொருவரின் பெயர் போடாமல் விடுபட்டால் 
பெரும் பிரச்சனையாக மாறிவிடும்.பங்காளி பெயரில் ஒருவர் பெயரை விட்டுவிட்டாலும் பெரும் சண்டையே வந்துவிடும்.

 

ஆனால் இப்போதெல்லாம், பிரச்சனை ஏற்படாதவாறு ஸ்மார்ட்டாக பத்திரிக்கை அடிக்க தொடங்கிவிட்டனர். அந்த ஒரு வகையில் தற்போது எளிய முறையில் அனைவருக்கும் புலப்படும் வகையில், யாருக்கும் மன சங்கடத்தை ஏற்படுத்தாதவாறு அச்சிடப்பட்டுள்ளது. அதில்,

"தங்கள் நல்வரவை இனிதே விரும்பும் 

"அடையாளம் காட்டிய அம்மா அப்பா
நல்வழி காட்டிய தாத்தா பாட்டிகள் 
அன்பு காட்டிய பெரியப்பா பெரியம்மா 
சிந்திக்க வைத்த சித்தப்பாக்கள் சித்திகள்
மதிப்புக்குரிய மாமாக்கள் அத்தைகள்
மனம் நிறைந்த அத்தான்கள் அக்காமார்கள் 
அக்கறை கொண்ட சகோதர சகோதரிகள்
பண்பு படைத்த சம்பந்திகள் 
மற்றும் 
நெஞ்சம் நிறைந்த நண்பர்கள் என எழுதப்பட்டு உள்ளது. இந்த பத்திரிக்கை சமூக வலைத்தளத்தில் யாரோ ஒருவர் பதிவிட அது தீயாய் பரவி அனைவரிடத்திலும் சென்று சேர்ந்து உள்ளது.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுமக்களும்.. செம்ம, நல்ல ஒரு விஷயம், இதனை வரவேற்கலாம், நல்ல ஐடியா, குட் என பல்வேறு வகைகளில் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பத்திரிகை தற்போது சமூக வலைத்தளத்தில் படுவேகமாக பலராலும் பகிரப்பட்டு வருவதை கொண்டு பார்க்கும்போது, அவர்கள் வீட்டு திருமணத்தின் போது எப்படி எல்லாம் பிரச்சனைகளை சந்தித்து இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள வைக்கும் படி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.