குஷியான செய்தி..! பட்டா மாற இனி அலையவே வேண்டாம்... இடத்தை ரிஜிஸ்டர் பண்ண உடனே தானாகவே பட்டா பெயர் மாறிவிடும்...! 

பொதுமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டு உள்ளது தமிழக அரசு. அதாவது பத்திர பதிவு செய்த உடன் தானாகவே பட்டா மாறுதல் செய்யும் முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம் மக்கள் அலைச்சல் இல்லாமல் பயன் பெற முடியும்.

சார்பதிவாளர் அலுவலகங்களில் வீடு, விளைநிலம் உள்ளிட்ட நிலம் பதிவு செய்யப்பட்ட வருகிறது. பின்னர் பட்டா பெயர் மாற்றுவதற்கு படிவத்தை வருவாய்த்துறைக்கு அனுப்பி இதற்கான ஒப்புகை சீட்டு எண் பொதுமக்களுக்கு கொடுக்கப்படும் 

இதனை கொண்டு தாலுகா அலுவலகத்தை அணுகி பட்டா பெயர்  மாறுதலுக்காக முயற்சி செய்தால் உடனடியாக கிடைப்பதும் கிடையாது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி  வருகின்றனர். குறிப்பாக  சர்வே எண், மூல ஆவணம் பார்க்க வேண்டும் எனக்கூறி வேதனை அடைகின்றனர்.

சர்வே எண்ணை பொறுத்தவரையில் பல  உட்பிரிவுகள் இருந்தால் மட்டுமே, நேரில் சென்று  ஆய்வு செய்ய செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகும். ஆனால், ஒரே சர்வே எண் இருந்தாலும்  பல காரணங்களை கூறி பட்டா மாறுதல் செய்ய நேரம் எடுத்துக்கொள்கிறது. இதன் காரணமாக பட்டா மாறுதல் செய்ய முடியாமல் மக்கள் அவதி படுகின்றனர். 

இதற்கெல்லாம் தீர்வு காணும் பொருட்டு,வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா ஓர்  அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளார். அதன் படி, இனி பத்திர பதிவு செய்த உடன் தானாகவே பட்டா மாறுதல் செய்யும் முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

எந்த ஒரு இடத்தையும் பதிவு செய்த உடன், தானாக பட்டா மாறுதல் செய்யப்படுவதால் சார்பதிவாளர்களுக்கு சற்று வேலைப்பளு கூடுமே தவிர பொதுமக்களுக்கு நல்ல பலன்  கிடைக்கும். அரசின் இந்த  தித்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து உள்ளது.