ஆப்பிளுக்கு போட்டி!! கலர்புல் இயர்பட்ஸ் ரெடி!
=========================

ஓப்போ நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டு பிரிந்துவந்து தனியே கடைவிரித்து வருகிறது ரியல்மீ.
செல்போன், இயர்போன், வைபை இயர்போன் என்று பல பொருட்களை ரியல்மீ அறிமுகப்படுத்தி வருகிறது.
டிசம்பர் 17ம் தேதி முதல் வைபை இயர் பட்ஸ்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவருகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் இயர்பட்ஸ் உடன் போட்டிபோடும் வகையில் நவீனமாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

ப்ளூடூத் 5.0 தொழில்நுட்பத்தில் 17மணி நேரம் பேட்டரி நீடிக்கும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன.
ரியல்மீ இயர்பட்ஸ்-களை க்யூ-ஐ சான்றிதழ்பெற்ற எந்த ஒரு வயர்லெஸ் சார்ஜரிலும் இணைத்து சார்ஜ் செய்துகொள்ளமுடியும்.

இந்த பட்ஸ்களில் நவீன டியூயல் மைக் உள்ளது.எனவே, இவற்றை பயன்படுத்தும்போது செல்போனில் தடையின்றி பேசலாம். 

மேலும், ஒன் டச் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியால் ஒலியின் அளவை கட்டுப்படுத்தவும் முடியும்.

குரல், இசை துல்லியமாக கேட்கும் வகையில் 12எம்.எம். ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன.

கருப்பு, வெள்ளை, மஞ்சள் என்று மூன்று கலர்களில் நாளை பகல் 12.30மணி முதல் ரியல்மீ மற்றும் ப்ளிப்கார்ட் வெப்சைட்களில் விற்பனைக்கு வருகிறது.

ரியல்மீ இயர்பட்ஸ் விலை ஜஸ்ட் ரூ.4,999தான்.