new aps introduced for love failures x Breakup

காதல் தோல்வியா..? வேறு காதல் துணை தேர்ந்தெடுக்க “புதிய செயலி Rx Breakup”..! 

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். அதற்கேற்றவாறு ஜாதி மதம் இனம் எதையும் பார்க்காமல் காதல் செய்கிறார்கள் காதலர்கள். ஆனால் அவ்வாறு செய்யும் காதல் கல்யாணத்தில் முடிந்தால் நல்லது.ஆனால் பல பேரின் காதல் தோல்வியில் முடிந்துள்ளது.

காதல் தோல்வியின் காரணமாக, பலர் மனமுடைந்து வாழ்கையையே தொலைத்து நிற்பது போல உணர்வார்கள். இதன் காரணமாக எப்பொழுதெல்லாம் அவர்கள் காதல் பற்றி நினைவு வருகிறதோ அப்பொழுதெல்லாம் அழுவதும், அதை பற்றியே தொடர்ந்து நினைத்துக் கொண்டு இருப்பதுமே தங்களது அன்றாட வேலையாக வைத்துக்கொள்வார்கள் .

இது போன்றவர்கள் காதல் தோல்வியில் மனமுடைந்தவர்கள், அந்த எண்ணத்தில் இருந்து விடுபட்டு, எப்படி இந்த சமூதாயத்தில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காக Rx Breakup என்ற ஒரு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலியில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஒரு சில அறிவுறுத்தலின் படி, தினமும் நடந்துக்கொண்டால் ஒரு மாதத்தில் காதல் தோல்வி பற்றிய எண்ணம் உங்களை நாடவே நாடாது ...

நீங்களும் அடுத்தவரை கரம் பிடித்து, உண்மையான காதலையும் வாழ்கையின் அர்தத்தையும் உணர முடியும்.