Asianet News TamilAsianet News Tamil

வாழ்க்கையின் படிகளை எடுத்துச்சொல்லும் 'நவராத்திரி' கொலு படிகள்!

மனிதன் படிப்படியாக தன் ஆன்மீக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில்  பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுதுகின்றன. 

navarathiri kolu stairs information
Author
Chennai, First Published Oct 9, 2018, 1:11 PM IST

மனிதன் படிப்படியாக தன் ஆன்மீக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில்  பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுதுகின்றன. 

ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும். பொம்மைகள் கூறும் தத்துவத்தையும் இங்கு காணலாம். 

நவராத்திரி, கொலுவில் 9 படிகள் கொண்டதாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு படிகளும் ஒவ்வொரு தத்துவத்தை மிக எளிதாக சொல்கிறது.

முதல் படி:

கொலு மேடையில் கீழிலிருந்து முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிர்களான, புல், செடி ,கொடி, போன்ற தாவரங்களின் பொம்மைகளை  வரிசைப்படி வைத்திருப்பார்கள்.

இரண்டாம் படி:

இரண்டாவது படியில், ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற உயிர்களின் பொம்மைகள் இடம்பெற்றிருக்கும்.

மூன்றாவது படி:

மூன்றாவது படியில், மூன்றறிவு படைத்த உயிரினங்களான கரையான், எறும்பு,  உள்ளிட்ட ஜீவராசிகளின் பொம்மைகள் இடம்பெற்றிருக்கும்.

நான்காம் படி:

நான்காவது படியில் நான்கறிவு உயிரிகளாக விளங்கும்  நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகள் வைத்து அளகரித்திருப்பார்கள்.

ஐந்தாம் படி:

ஐந்தாவது படியில், ஐந்து அறிய கொண்ட மிருகங்கள் மற்றும் பறவைகளின் மொம்பைகள் வைத்திருப்பார்கள்.

ஆறாம் படி:

ஆறாவது படி மனிதர்களுக்கு உரியது. எந்த உயிருக்கும் இல்லாத சிந்திக்கும், சிரிக்கும் சக்தியை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளார். அத்தகைய ஆறாவது அறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகளை வைத்து ஆறாவது படியை நிர்மாணிக்க வேண்டும்.

ஏழாம் படி:

மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள் கொண்டு ஏழாவது படியை அமைக்க வேண்டும்.

எட்டாம் படி:

தேவர்கள், அட்டதிக்கு பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகளை கொண்டு எட்டாவது படியை அலங்காரம் செய்ய வேண்டும்.

ஒன்பதாம் படி:

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தேவர்கள், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி தேவி போன்ற முப்பெரும் தேவிகள் ஆகிய தெய்வங்களையும், அவர்களின் நடுவில் நடுநாயகமாக ஆதிபராசக்தியின் உருவ பொம்மைகளையும் வைத்து ஒன்பதாவது படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகவே இது போன்ற வரிசையில் கொலு பொம்மைகள் அடுக்கி வைப்பார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios