பெண்களுக்கு வரப்பிரசாதம்...! மஞ்சள் வெட்டிவேர் மூலிகையோடு தயாரிக்கப்பட்ட நாப்கின்..! 

இயற்கையான முறையில், நாப்கின்களை உருவாக்கி அண்ணா பல்கலைக்கழக மாணவி அசத்தி உள்ளார்.

தமிழகம் முழுவதும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு  உள்ளது. இந்த நிலையால் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல், ஆரோக்கியமான முறையில் நோய் எதிர்ப்பு தன்மையை கொடுத்து, கிருமிகளை அளிக்கக்கூடிய வகையில் இயற்கையான முறையில் நாப்கின்களை தயாரித்து உள்ளார் மாணவி ப்ரீத்தி

மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை மூலம் நாப்கினை நாப்கினை உருவாக்கி உள்ளார். இந்த நாப்கின்கள் ஒரு மாதத்திற்குள் மடங்கிவிடும் தன்மை கொண்டதால் மிகவும் வரவேற்பை பெற்று உள்ளது. இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளதால், பாக்டீரியா நோய்த்தொற்றை வர விடாமல் தடுக்கும். இந்த நாப்கின், 3 மி.மீ தடிமனும், 1,700  % அளவுதிரவத்தை உரிஞ்சுக்கூடியது என தெரிவித்து உள்ளார். தாவரங்களின் மூலம் கிடைக்கும் பாலிமர்கள் மற்றும் கார்போஹைட்ரேட்கள் இந்த நாப்கினில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது பயன்பாட்டில் உள்ள மற்ற நாப்கின்களில் பிளாஸ்டிக் உள்ளது. அது நச்சுக்களை வெளியிடும் தன்மை கொண்டது. இதனை பயன்படுத்தும் பெண்களுக்கும் தோல் அரிப்பு ஏற்படும். மற்ற பிரச்னையும் உண்டு. ஆனால் இயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த நாப்கினை பயன்படுத்துவதால் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும். 

"பெண்களுக்காக பிரத்யேகமாக ஏதாவது செய்ய வேண்டும் என நான் நீண்ட நாட்களாக நினைத்து இருந்தேன். அதற்காகத்தான் தற்போது என்னோட ஆராய்ச்சி படிப்பில் இதனையே செய்து உள்ளேன் என  பெருமையாக தெரிவித்து உள்ளார் ப்ரீத்தி.

இவருடைய முயற்சிக்கும்,சாதனைக்கும் மக்கள் மத்தியில் பெரும் பாராட்டு குவிந்து வருகிறது. மேலும் இந்த நாப்கின் இனி வரும் காலங்களில் பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. நல்ல வரவேற்பும் கிடைக்கும்.