Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் தாத்தா பாட்டியான நாராயண மூர்த்தி, சுதா மூர்த்தி.. மகனுக்கு பகவத் கீதையில் இருந்து பெயர் வைத்த ரோஹன்..

நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி மற்றும் அபர்ணா கிருஷ்ணன் ஆகியோருக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது.

Narayana Murthy Sudha Murthu become grand parents again as son rohan welcomes baby boy Rya
Author
First Published Nov 16, 2023, 2:21 PM IST | Last Updated Nov 16, 2023, 2:21 PM IST

இன்ஃபோசிஸ் நிறுவனர் என்ஆர் நாராயண மூர்த்தி மற்றும் எழுத்தாளர்- நன்கொடையாளர் சுதா மூர்த்தி மீண்டும் தாத்தா பாட்டி ஆகி உள்ளனர். இவர்களின் மகன் ரோஹன் மூர்த்தி மற்றும் அபர்ணா கிருஷ்ணன் ஆகியோருக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது. அக்ஷதா மூர்த்தியின் இரண்டு மகள்களுக்கு தாத்தா பாட்டியாக இருக்கும் நாராயண மூர்த்தி - சுதா மூர்த்தி இது மூன்றாவது பேரக்குழந்தை ஆகும்

நவம்பர் 10-ம் தேதி பெங்களூருவில் அபர்ணாவுக்கு குழந்தை பிறந்ததாகவும், தாயும், மகனும் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் குழந்தைக்கு ஏகாக்ரா என்று பெயரிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சமஸ்கிருத வார்த்தையாகும். ஏகாக்ரா என்றால் அசைக்க முடியாத கவனம் மற்றும் உறுதிப்பாடு என்று அர்த்தம். இந்த பெயர் பகவத் கீதையின் ஆறாவது அத்தியாயத்திலும் உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ரோஹன் மூர்த்தி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி மற்றும் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். 40 வயதாகும் அவர் கணினி விஞ்ஞானி-தொழில்முனைவோர் ஆவார். அவர் Soroco என்ற தரவு அடிப்படையிலான மென்பொருள் நிறுவனத்தை நிறுவியவர். சுதா மூர்த்தியின் குழந்தைகளுக்கான புத்தகங்களைத் தழுவி யூடியூபில் அனிமேஷன் நிகழ்ச்சிகளின் தொடரான "Story Time with Sudha Amma" தயாரித்த மூர்த்தி மீடியாவின் தலைவராகவும் ரோஹன்  உள்ளார்.

ரோஹன் - அபர்ணா இந்த ஜோடி 2019 இல் திருமணம் செய்து கொண்டது. பெங்களூரில் நடந்த திருமணத்தில் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர்கள் நந்தன் நிலேகனி, கிரிஷ் கோபாலகிருஷ்ணன், எஸ்டி ஷிபுலால் மற்றும் கே தினேஷ் மற்றும் பயோகான் தலைவர் கிரண் மசூம்தார்-ஷா உட்பட இரு குடும்பங்களின் நெருங்கிய குடும்பத்தினரும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.

லட்சாதிபதி ஆவதற்கான டிப்ஸ் : பணம் பெருக இந்த 6 பழக்கங்களை ஃபாலோ பண்ணுங்க..

நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தியின் மற்ற இரண்டு பேரக்குழந்தைகள் அக்ஷதா மூர்த்தி மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரின் மகள்கள் கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா ஆகியோர் ஆவர். சுதா மூர்த்தி தனது இரண்டு பேத்திகளை பற்றி பேசுவது வழக்கம். மேலும் குழந்தைகளுக்கான தனது சமீபத்திய புத்தகங்களை அவர்களுக்காக அர்ப்பணித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios