சஞ்கி விராசாத் என்ற கட்சி தாங்கள் வெற்றி பெற்றால் வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூபாய் 10 ஆயிரமும் உதவித் தொகையாக வழங்கப்படும் என டெல்லி மக்களிடம் வாக்குறுதி அளித்துள்ளது.  

சஞ்கி விராசாத் என்ற கட்சி தாங்கள் வெற்றி பெற்றால் வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூபாய் 10 ஆயிரமும் உதவித் தொகையாக வழங்கப்படும் என டெல்லி மக்களிடம் வாக்குறுதி அளித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தேர்தல் வந்துவிட்டாலே அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதியாக வாய்க்கு வந்ததை எல்லாம் அள்ளி விடுவது சாதாரண விஷயம். இது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.இந்த நிலையில் சஞ்கி விராசாத் கட்சி பல கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூபாய் 10,000 உதவி தொகையாக வழங்கப்படும் என்றும் 50 சதவீத தள்ளுபடியில் மதுபானம் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோன்று இஸ்லாமியர்களுக்கு ஈகை திருநாளை முன்னிட்டு ஒரு ஆடு வழங்கப்படும் என்றும், பிஎச்டி வரை படிப்பவர்களுக்கு கல்வி இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ். அனைவருக்கும் இலவச ரேஷன் பொருட்கள், பெண்குழந்தைகள் பிறந்தால் ரூபாய் 50,000 வயதானவர்களுக்கு மாதம் ரூபாய் 5 ஆயிரம் என பல வாக்குறுதிகளை அள்ளி விட்டுள்ளது. இந்த விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது