Asianet News TamilAsianet News Tamil

மோடியின் அடுத்த அதிரடி ட்விட்..! நான் ஏன் வெளியேறனும்... மார்ச் 8 இதுதான் சங்கதி..!

நேற்று இரவு பிரதமர் மோடி அதிரடியாக ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில், 'வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முகநூல், சுட்டுரை, இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து விலகிவிடலாம் என்று யோசித்து வருகிறேன். 

modi tweet about march 8th and he will allow ladies to handle the social media account
Author
Chennai, First Published Mar 3, 2020, 1:50 PM IST

மோடியின் அடுத்த அதிரடி ட்விட்..! நான் ஏன் வெளியேறனும்... மார்ச் 8 இதுதான் சங்கதி..! 

பிரதமர் மோடி சமூக ஊடகங்களாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பலகோடி பேர் பின்தொடர செயல்படுகிறார். அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள், முக்கிய நபர்களின் சந்திப்புகள், வெளிநாட்டு பயணங்கள் போன்றவற்றை உடனுக்குடன் தனது கணக்கில் படங்களுடன் பதிவிட்டு வருகிறார். அவரை ட்விட்டரில் 5.33 கோடி பேரும், முகநூலில் 4.4 கோடி பேரும், இன்ஸ்டாகிராமில் 3.52 கோடி பேரும் பின் தொடா்ந்து வருகின்றனா்.

 

இந்தநிலையில் நேற்று இரவு பிரதமர் மோடி அதிரடியாக ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில், 'வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முகநூல், சுட்டுரை, இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து விலகிவிடலாம் என்று யோசித்து வருகிறேன். இது தொடா்பான விவரங்களை விரைவில் அறிவிக்கிறேன்’ என்று பதிவு செய்திருந்தார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரதமரின் பதிவு வெளியான சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு கிளம்பியது.

சமூக வலைதளங்களில் இருந்து விலக வேண்டாம் என பலரும் பிரதமருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொர்பாக ட்விட்டரில், 'NoSir', 'NoModiNoTwitter' என்கிற ஹஸ்டேக்கள் ட்ரெண்ட் ஆகியுள்ளது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிரதமர் ஆக்டிவ்வாக இருக்க வேண்டும் எனவும் பிரதமர் சமூக வலைதளங்களில் பயன்பாட்டை நிறுத்தினால் தாங்களும் அதை செய்யப்போவதாகவும் மோடியின் ஆதரவாளர்கள் பதிவிட்டு வந்தனர்.

இந்த ஒரு நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வரும் மார்ச் 8 ஆம் தேதியன்று மகளிர் தினம் என்பதால், அன்றைய தினத்தில் சாதனை செய்த பெண்மணியாக தேர்வாகும் நபர்  தனது சமூக வலைத்தள பக்கத்தை நிர்வகிக்கலாம் என ட்வீட் செய்து உள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios