மோடிக்கு கழிந்தது "கண் திருஷ்டி"..! "கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது"..! விழுந்த நொடியே கம்பீரமாக நிமிர்ந்த பிரதமர்..! 

உத்தரபிரதேசத்தில் நமாமி கங்கா திட்ட கூட்டத்திற்காக சென்றிருந்த பிரதமர் மோடி படியேறும் போது ஜஸ்ட் ஸ்லிப் ஆனது. அப்போது உதவியாளர்கள் வருவதற்குள் அடுத்த நொடியே நிமிர்ந்து  நின்று ஒய்யாரமாக அடுத்த படிக்கட்டை எடுத்து வைத்தார் மோடி.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சந்திரசேகர் ஆசாத் வேளாண் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி தலைமையில் கங்கை நதி மேலாண்மை தொடர்பான முதல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

இதையடுத்து, கங்கை ஆற்றை தூய்மைப் படுத்தும் பணிகளை அந்த நதியில் படகில் பயணித்தபடியே பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். படகுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய பின்னர், படியில் பிரதமர் மோடி ஏறும் போது ஸ்டெப்பில் தடுக்கியது. அப்போது கீழே விழுவதத்திற்குள் சமாளித்து ஒய்யாரமாக நிமிர்ந்து நின்றார். இந்த காட்சி வைரலாக பரவி வருகிறது. 

இது குறித்து எழுந்த விமர்சனத்தில் சிலர் அவர் விழுவதை கண்டு நக்கல் அடித்து கருத்து பதிவிடுவதும், சிலர் சிரிப்பது போல எமோலி வைப்பதும் இருக்கின்றனர். ஆனால் மோடியின் ஆதரவாளர்கள் தொண்டர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்குக்கும் போது,"இது நாள் வரை அவர் மீது இருந்த கண் திருஷ்டி" நீங்கிவிட்டது. 

"கல்லடி பட்டாலும் கண்ணடி பட கூடாது' என்பார்கள். அதர்கேற்ப அவர் இன்று ஸ்லிப் ஆனதை பார்க்கும் போது, கல்லடியும் படாமல், இதுநாள் வரை அவர் மீது பட்ட கண்ணடி நீங்கி திருஷ்டி கழிந்து விட்டது என்று விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க மோடியை பொறுத்தவரையில் ஆதரிப்பவர்களும் அவர் பெயரை உச்சரிக்காமல் இருப்பது இல்லை...எதிர்ப்பவர்களும் அவர் பெயரை உச்சரிக்காமல் இருப்பது இல்லை.. எதற்கெடுத்தாலும் மோடி  தான் காரணம் என சொல்லும் அளவுக்கு அனைவரையும் ஆட்டி படைத்து வருபவர்... உலக நாடுகளே.. அடுத்து மோடி என்ன செய்ய போகிறார் என வழி மீது விழி வைத்து பார்க்கின்றனர்.

இப்படி ஒரு தருணத்தில் பிரதமர் மோடி படியேறும் போது ஜஸ்ட் ஸ்லிப் ஆனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.